இந்தியில் 100 கோடி வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1.. தமிழ்நாட்டில் இட்லி கடை 100 கோடி வசூல் செய்யுமா?

சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த அக்டோபர் 2ம் தேதி வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் கர்நாடகாவில் 170 கோடி வசூலும் இந்தியில் 100 கோடி வசூலும் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக தமிழில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான இட்லி கடை திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் இதுவரை 50 கோடி பிளஸ் வசூலை மட்டுமே கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சிறு பட்ஜெட்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 90 கோடி வரை வசூல் ஈட்டி சாதனை படைத்தது. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் 150 கோடி வசூலும், விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி திரைப்படம் 100 கோடி வசூலும் ஈட்டின.

Kantara Chapter 1 enters 100 crore club in Hindi but Idli Kadai struggles at Box Office in hometown
Photo Credit:

சூரி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் 40 கோடிக்கும் அதிகமான வசூலையும் 12 ஆண்டுகள் கழித்து வெளியான விஷாலின் மத கஜ ராஜா திரைப்படம் 50 கோடி வசூலையும் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் அதிக வசூல் படங்கள்: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூலை ஈட்டிய படமாக ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. சன் பிக்சர்ஸ் 4 நாட்களில் கூலி படம் 404 கோடி வசூல் செய்தது என அறிவித்தது. ஆனால், அதன் பிறகு 500 கோடி வரை படம் வசூல் செய்ததாக டிராக்கர்கள் கணித்தாலும் சன் பிக்சர்ஸ் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கலாநிதிமாறன் படக்குழுவுக்கு பரிசுகளை வழங்கியது போலவும் வழங்கவில்லை.

அஜித் குமாரின் குட் பேட் அக்லி 200 கோடி வசூலை ஈட்டியது. சூர்யாவின் ரெட்ரோ, கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப், அஜித் குமாரின் விடாமுயற்சி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தன. இறுதியாக சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் 100 கோடி வசூல் செய்தாலும், அந்த படமும் பெரிய ஹிட் இல்லை என்றே கூறுகின்றனர்.

இந்தியில் 100 கோடி: ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோவாக நடித்த நிலையிலும், இந்தியில் அந்த படம் பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை. ஆனால், அக்டோபர் 2ம் தேதி வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 100 கோடி வசூலை இந்தியிலேயே அள்ளியுள்ளது. உலகளவில் 427 கோடி வசூலை படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் 500 கோடி வசூலை காந்தாரா சாப்டர் 1 கடந்து கூலி படத்தின் மொத்த வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் காந்தாரா சுமார் 30 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இட்லி கடை 100 கோடி வருமா?: தமிழ் சினிமாவின் பெரிய படங்கள் தமிழ்நாட்டிலேயே 100 கோடி வசூல் ஈட்ட தவித்து வருகின்றன. ஆனால், கன்னட படமான காந்தாரா சாப்டர் 1 இந்தியிலேயே 100 கோடி வசூல் ஈட்டியது. அதன் முதல் பாகமும் 80 கோடி வசூலை இந்தி பெல்ட்டில் ஈட்டியது. தனுஷின் இட்லி கடை திரைப்படம் இதுவரை 41 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் பெற்றுள்ளது என்றும் உலகளவில் 50 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது என்றும் கூறுகின்றனர். இந்த வார இறுதியில் இட்லி கடை வியாபாரம் பார்த்தால் கூட அதிகபட்சம் லைஃப் டைம் 70 முதல் 75 கோடி தான் வரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X