கடற்கரையில் மாளிகை.. ரூ.12 கோடி மதிப்புள்ள ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்ட வீடு!

சென்னை: காந்தாரா படத்தின் மூலம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி. இவர் தனது குடும்பத்துடன் கர்நாடகாவில் கடற்கரைக்கு அருகே பிரம்மாண்டமான மாளிகையில் வசித்து வருகிறார். இதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.12 கோடி மதிப்பு என்று கூறப்படுகிறது. அந்த வீட்டில் இருக்கும் சிறப்பு அம்சத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடகாவின் குந்தபுரா பகுதியில் அரபிக்கடலை நோக்கி இந்த வீடு இயற்கை அழகால் சூழப்பட்டுள்ளது. Maravanthe கடற்கரை அருகே இருப்பதால், கடல்காற்றும் இயற்கை காட்சிகளும் இந்த மாளிகைக்கு தனித்துவமான அழகை தருகின்றன. இந்த வீடு ஒருகாலத்தில் ரிஷப் ஷெட்டியின் கொள்ளுத் தாத்தாவுக்குச் சொந்தமானது. பின்னர் குடும்ப பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் லேட்டரைட் படிகள் மற்றும் அழகிய பர்மா-தேக்கு மர கதவுகள் காண்பவரை கவரும் வகையில் உள்ளது.

ரிஷப் ஷெட்டியின் வீடு: வீட்டின் நுழைவாயிலில் பித்தளையில் கோயில் மணியும், வீட்டின் மையத்தில் பெரிய வானொளி ஏட்ரியம் அமைக்கப்பட்டு, அதன் நடுவில் 300 கிலோ எடையுள்ள கிரானைட் கற்களால் துளசி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைச் சுற்றி ரிஷப் ஷெட்டியின் படைப்புப் பயணத்தை நினைவூட்டும் பல பொருட்கள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் யக்ஷகனா தலைக்கவசம், காந்தாரா படத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையும் உள்ளது.

Kantara Rishab Shetty home
Photo Credit:

'மழை அறை' : இந்த பிரம்மாண்ட மாளிகையின் மிகவும் வித்தியாசமான அம்சங்களில் ஒன்று 'மழை அறை'. கண்ணாடி சுவர்களும், செயற்கை மழை வடிவமைப்பும் கொண்ட இந்த அறை, அமைதியான சூழலில் யோசிக்கவும் திரைக்கதை எழுதவும் ரிஷப் ஷெட்டி பயன்படுத்தும் இடமாக கூறப்படுகிறது. மேலும், வீட்டில் பிரீமியம் தரத்தில் உருவாக்கப்பட்ட தனியார் தியேட்டர் உள்ளது. இதில் இத்தாலிய தோல் சாய்வு நாற்காலிகள் மற்றும் 150 அங்குல பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் Dolby Atmos ஒலி அமைப்பும் பொருத்தப்பட்டிருப்பதால், வீட்டிலேயே திரையரங்கு அனுபவத்தை பெறலாம்.

கார் சேகரிப்பு: ரிஷப் ஷெட்டியின் வீட்டில் பல வாகனங்களை நிறுத்த பெரிய கேரேஜும் உள்ளது. அதில் Audi Q7, Mahindra Thar, Jeep Compass மற்றும் Royal Enfield மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாகனங்களின் ஹார்ன் ஒலிகளும் உள்ளூர் நாட்டுப்புற இசை மெட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தான் ரிஷப் ஷெட்டி வாகனத்தின் ஸ்பெஷல். அதோடு மட்டுமில்லாமல், வீட்டிற்கு அருகிலேயே புதுப்பிக்கப்பட்ட பழைய அரிசி ஆலையில் ரிஷப் ஷெட்டியின் தயாரிப்பு நிறுவன அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்குதான் அவர் தனது புதிய திரைப்பட பணிகளை மேற்கொள்கிறார். ரிஷப் ஷெட்டியின் இந்த கடற்கரை மாளிகை, அவரின் வாழ்க்கை முறை அவரின் படைப்பாற்றலின் பிரதிபலிப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X