ஸ்ரீதேவி மகள் பக்கத்தில் இருக்க அர்ஜுன் கபூரிடம் செக்ஸ் பற்றி கேட்ட இயக்குனர்

By Siva

Recommended Video

பாலிவுடில் கலக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் சுஷ்மிதா சென்

மும்பை: காபி வித் கரண் நிகழ்ச்சியில் தங்கை ஜான்வியை பக்கத்தில் வைத்துக் கொண்டு அர்ஜுன் கபூரிடம் அவரின் செக்ஸ் வாழ்க்கை பற்றி கேட்டுள்ளார் இயக்குனர் கரண் ஜோஹார்.

பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சி காபி வித் கரண். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் கபூர் தனது தங்கை ஜான்வி கபூருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜான்வி

ஜான்வி

ஜான்வி நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கரண் கேட்டதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். தடக் பட ஹீரோ இஷான் கட்டாரை காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கும் இல்லை என்றார் ஜான்வி. இதை பார்த்த அர்ஜுனோ, இஷான் எப்பொழுது பார்த்தாலும் ஜான்வியை தான் சுற்றி சுற்றி வருகிறார் என்றார்.

அர்ஜுன்

அர்ஜுன்

அர்ஜுனை பார்த்து நீங்கள் சிங்கிளா என்று கரணும், ஜான்வியும் கேட்டார்கள். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். அவர் மவுனமே பதிலை அளித்துவிட்டது. அர்ஜுன் கபூர் சீனியர் நடிகையான மலாய்கா அரோராவை காதலித்து வருகிறார் என்றும், அவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

தங்கை

தங்கை

கரண் ஜோஹார் அர்ஜுன் கபூரிடம் அவரின் செக்ஸ் வாழ்க்கை குறித்து கேட்டார். தங்கையை பக்கத்தில் வைத்துக் கொண்டு கேட்கும் கேள்வியா இது என்று கூறி அர்ஜுன் மழுப்பிவிட்டார். அர்ஜுனை போன்றே மலாய்காவையும் ஒரு நிகழ்ச்சியில் கலாய்த்தார் கரண். காபி வித் கரண் நிகழ்ச்சியில் பிரபலங்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி சாதாரணமாக கேள்வி கேட்டு வருகிறார் கரண்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஆங்கில பாடல்கள், ஹாலிவுட் பற்றிய கேள்விகளுக்கு ஜான்வி தான் பதில் அளித்தார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார் அர்ஜுன் கபூர். ஸ்ரீதேவி இறந்ததில் இருந்து அவரின் மகள்களான ஜான்வி, குஷியை தனது சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X