26 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன்..காஜல் நிகழ்ச்சியில் கரண் ஜோஹர் சொன்ன சர்ச்சை பேச்சு!
மும்பை: நடிகரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசிய சம்பவம் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகைகள் கஜோல் மற்றும் ட்விங்கிள் கன்னா இணைந்து நடத்தும் 'Too Much' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரண் ஜோஹர், பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தனது காதல் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கரண் ஜோஹர்:'Too Much' நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் "உண்மையா? பொய்யா?" என்ற சுவாரஸ்யமான விளையாட்டு நடத்தப்பட்டது. அதில், ஜான்வி கபூர், உங்களைப் பற்றிய ஒரு சர்ச்சைக்குரிய உண்மையையும், ஒரு பொய்யையும் சொல்லுங்கள். எது உண்மையா என்பதை நாங்கள் கண்டுபிடிக்கிறோம் என்று கரண் ஜோஹரிடம் சொன்னார். இதற்கு சிரித்தபடி பதிலளித்த கரண் ஜோஹர், நான் 26 வயதில் என் கன்னித்தன்மையை இழந்தேன், அதுவும் உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் என்று கூறினார்.

கன்னித்தன்மையை இழந்தேன்: இந்த பதிலை கேட்ட உடனே ஜான்வி கபூர் அதிர்ச்சியில் உறைந்து போய் வாயை பிளந்து என்ன செய்வது என்று தெரியாமல், சில நொடிகள் சிரித்துக்கொண்டே "என்ன சொல்றீங்க?" என்று மீண்டும் கேட்டு ரியாக்ஷன் கொடுத்தார். இதனால் அந்த நிகழ்ச்சி செட்டே சிரிப்பில் முழங்கியது. ஆனால், அதற்கு பின் கரண் ஜோஹர், நான் சொன்னதை நீங்க தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள், உங்கள் குடும்பத்தில் ஒருவருடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன் என்பதைத்தான் அப்படி கூறினேன் என்று விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு தான் கரண் ஜோஹர் அங்கு இருப்பவர்களிடம் விளையாடி இருப்பது தெரிந்து செட்டில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
ஷாக்கான ஜான்வி: மேலும், அந்த நிகழ்ச்சியில் கரண் ஜோஹர் தனது இளமைக் கால காதல் வாழ்க்கை, பாலிவுட் நட்பு உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி மிகவும் ஓப்பனாக பேசினார். அதேபோல், ஜான்வி கபூரும் தனது குடும்பம், சினிமா பயணம் மற்றும் அம்மா ஸ்ரீதேவி குறித்து பல விஷயத்தை பகிர்ந்து கொண்டார். கரண் ஜோஹரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிலர் அவரது வெளிப்படைத்தன்மையை பாராட்டினாலும், பொது இடத்தில் இப்படியா பேசுவது என அவரை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications