ஹீரோ .. ஹீரோ ..

By Staff

"நம்மவர்" படத்தில் வித்தியாசமான வில்லனாக கமலஹாசனால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கரண் சொந்தமாகப் படம் தயாரித்து, அதில் அவரேஹீரோவாகவும் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

மலையாளப் படவுலகில் ரகு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் கரண். "நம்மவர்" படத்தில் நடிக்க வருவதற்கு முன்மலையாளத்தில் ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். இதில் அந்த மாதிரி படங்களும் அடங்கும்.

"நம்மவர்" படத்திற்குப் பிறகு வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆரம்பித்த கரண் குறுகிய காலத்தில் ஏராளமானதமிழ் படங்களில் நடித்தார்.

வில்லனாக ஆரம்பித்து, குணச்சித்திர ரோல்களிலும் அட்டகாசம் செய்த கரண், ஹீரோவாக மட்டும் இதுவரைநடிக்கவில்லை. இரண்டாவது ஹீரோ என்ற லெவலில்தான் இருந்து வந்தார்.

காரணம் அவரது உடல் கட்டு. தமிழ் சினிமாவில் காணாமல் போன பிரபு இல்லாத குறையை தனது உடல் மூலம்ஈடுகட்டி வருகிறார்.

இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். இரண்டு ஹீரோ, வில்லன் என எந்தப் பாத்திரத்திலும் நடிக்கமாட்டேன் என்று திடீர் முடிவு எடுத்தார் கரண். அதற்குப் பிறகு படங்களே இல்லை. வந்த வாய்ப்புகள் எல்லாமேஇரண்டாவது ஹீரோ கேரக்டர்தான். அவற்றை உதறித் தள்ளிவிட்டார்.

இதனால் இப்போது வீட்டில் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கரண் இப்போது தானே ஒரு படம் தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்க முடிவுசெய்துள்ளார்.

முதலில் தானே டைரக்ட் செய்யவும் நினைத்திருந்தார். ஆனால், நல்ல வேளையாக கடைசி நேரத்தில் அந்த விபரீதயோசனையை மாற்றிக் கொண்டு நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார் கரண்.

இந்த நியூஸைப் படிப்பவர்களுக்கு விட்டுடு தம்பி, அது வேணாம் தம்பி என்ற பாடல் நினைவுக்கு வந்தால்நாங்கள் பொறுப்பல்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X