தமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ ... ஹீரோ கார்த்தியா?

லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற 'அத்திரண்டிகி தாரேதி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கார்த்தி. இவர் அடுத்ததாக மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியில் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது.

Karthi in athirandiki thaarethi remake?

ஆனால் அதை கார்த்தி மறுத்துவிட்டார். இந்நிலையில் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற 'அத்திரண்டிகி தாரேதி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு தெலுங்கில், திரிவிக்ரம் இயக்கத்தில், பவன்கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் அத்திரண்டிகி தாரேதி'. நல்ல வசூலை வாரிக்குவித்த இந்த படம், ஆந்திர அரசின் 4 நந்தி விருதுகள் உள்பட பல விருதுகளையும் வென்றது.

இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் நடிக்க கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் நாயகன் மற்றும் இயக்குநர் குறித்த தகவலை லைகா பட நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X