சீர்திருத்தப் பள்ளி சிறுவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கார்த்தி!

நடிகர் கார்த்திக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி சென்னை குன்றத்தூர் அருகே உள்ள லிட்டில் ட்ராப்ஸ் காப்பகத்திற்கு உணவுப்பொருட்களை வழங்கினார். 400 க்கும் மேற்பட்ட முதியோருக்கு உணவு வழங்கினார் கார்த்தி. இந்த காப்பகத்துக்கு ரூ 50 ஆயிரம் நிதியும் வழங்கினார்.
மதியம் புரசைவாக்கம் மற்றும் ராயபுரத்தில் இருக்கும் பெண்கள் - ஆண்கள் அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு சென்ற கார்த்தி, மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பையா, பருத்திவீரன் வசனங்களைப் பேசிக்காட்டி மகிழ்வித்தார்.
இங்கிருந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவாக சிக்கன்-65 உடன் பிரியாணி விருந்து வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு தேவையான மேசை, நாற்காலி, பக்கெட் போன்ற பிற பொருட்களையும் வழங்கினார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சார்பாக அன்னதானம், கண்தானம், இரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.
கார்த்தி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள், கார்த்தியுடனிருந்து உதவினர்.


Click it and Unblock the Notifications











