அண்ணனுக்கு போட்டியாக 'சிக்ஸ் பேக்கில்' களம் இறங்கும் கார்த்தி
சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா வெற்றியடைந்ததைத் தொடந்து, அவர் அடுத்ததாக இயக்கும் படம் 'பிரியாணி'. ஹீரோவாக கார்த்தி , ஹீரோயின் ஹன்சிகா.
இதில் கார்த்தி புது கெட்டப்புடன் வருகிறாராம். அது என்ன என்று இப்போதே அவரது ரசிகைகளிடம் ஆவல் அதிகமாகி விட்டது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் அண்ணன் சூரியாவுக்கு போட்டியான சிக்ஸ் பேக்காக கூட இருக்கலாம் என்பது போல கார்த்தியே கூறியுள்ளார்.

கார்த்தியின் புதிய அவதாரம்!
மங்காத்தா படத்தில் அஜித்தை புது கெட்-அப்பில் காட்டி அனைத்து அஜித் ரசிகர்களின் பாராட்டையும் அள்ளுன வெங்கட் பிரபு, கார்த்தியையும் ரசிகர்கள் இதுவரையில் பார்க்காத புது கெட்-அப்பில் காட்ட முயற்சி செய்துவருகிறாராம். கார்த்திக்கும் கோட் போடப்போறியாப்பா....?

பருத்திவீரனை பிடிக்கும்பா...
கார்த்தியை வைத்து பல வித மேக்-அப் செய்து பார்த்துவிட்டு பின்பு கடைசியாக ஒரு கெட்-அப்பை நீண்ட நேரத்திற்கு பிறகு தேர்வு செய்தாராம் இயக்குனர் வெங்கட் பிரபு. கார்த்தியின் இந்த புது அவதாரம் கார்த்திக்கு இருக்கும் பெண் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டாராம் வெங்கட் பிரபு.

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே ஜோடி...
சூர்யாவுடன் சிங்கம்-2 படத்தில் ஜோடியாக நடிக்கும் ஹன்ஸிகா மோத்வானி தான் கார்த்திக்கு இந்த படத்தில் ஜோடி. வழக்கம் போல யுவன் ஷங்கர் ராஜா வெங்கட் பிரபுவின் படத்திற்கு இசையமைக்கிறார்

மா பாஷை தெலுகு...
தமிழைவிட தெலுங்குக்கு அண்ணன், தம்பிகள் தரும் மரியாதை தனியாக இருக்கிறது. புதிய படத்தைக் கூட ஆந்திராவில்தான் அறிவித்திருக்கிறார் கார்த்தி. அலெக்ஸ் பாண்டியன் பேட் பாய் என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

பெட்டிக்குள் படுத்த அலெக்ஸ்...
தமிழில் இந்த காவிய படத்தை யாரும் புரிந்து கொள்ளாத கோபத்தில் ஆந்திராவில் கொஞ்சம் அதிகமாகவே படத்தை விளம்பரம் செய்தார் கார்த்தி. பாண்டியனின் கரம் மசாலா ஆந்திரா ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கணக்குப் போட்டிருப்பார்கள். ஆனால் நடந்தது வேறு. படத்தை வாரியல் கொண்டு வாரி கூட்டுகின்றன ஆந்திரா மீடியாக்கள்.

மாத்தி... மாத்தி... பேசறியேப்பா...
அலெக்ஸ் பாண்டியன் வெளிவருவதற்கு முன் அளித்த பேட்டியொன்றில் சிக்ஸ்பேக் வைத்தால் என்னோட கேள்ட்ஸம் போய்டும்னு சொன்ன கார்த்தி, இப்போ ஒரு ஸ்கிரிப்ட் கேட்டிருக்கேன், பாக்ஸர் வேடம், அந்தப் படத்துக்காக உடம்பை கிண்ணுன்னு மாத்தப் போறேன்னு சொல்லியிருக்காரு.

குழப்புதே...
கூட்டி, கழிச்சுப் பார்த்தா, கணக்கு சரியா வரும்னு நினைக்கறேன்..... பொறுமை கடலினும் பெரிது.


Click it and Unblock the Notifications











