டிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி
ஹைதராபாத்: சின்ன பாபு படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு கார்த்தி ஆட்டோவில் சென்றுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குடும்பத்துடன் பார்க்க சிறந்த படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரில் படம் ரிலீஸானது.

கொண்டாட்டம்
தமிழை போன்றே தெலுங்கிலும் படம் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து ஹைதராபாத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கார்த்தி கலந்து கொண்டார்.

கார்த்தி
ஹைதராபாத்தில் பெய்த கனமழையால் கார்த்தி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அவர் காரில் இருந்து இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்றார்.

புகைப்படங்கள்
கார்த்தி ஆட்டோவில் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை அவரின் அண்ணன் சூர்யா தயாரித்தார்.

பாராட்டு
சின்ன பாபு படம் அருமை என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவே ட்விட்டரில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











