Ameer - உறவை ஒட்ட வைக்க பார்க்கும் சூர்யா?.. அமீர் உறவை அறுத்தெரிய தயாரான கார்த்தி?

சென்னை: பருத்திவீரன் படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருத்திவீரன் பிரச்னை மீண்டும் பொதுவெளிக்கு வந்தது. நிலவரம் இப்படி இருக்க கார்த்தி பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பருத்திவீரனில் அமீர் பொய் கணக்கு காண்பித்துவிட்டார். அவர் ஒரு திருடன். தோற்றுபோன குதிரை என ஏகத்துக்கும் மட்டமாக பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு அமீரும் தக்க பதிலடி கொடுத்தார். அமீர் தனது அறிக்கையில், "பருத்திவீரனில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்தவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள்" என வேதனையோடு குறிப்பிட்டிருந்தார்.

Karthi humiliated Ameer at Kalaignar 100 function Here is the full details

பெருகிய ஆதரவு: அமீரின் அந்த அறிக்கைக்கு அடுத்து சசிகுமார், சமுத்திரகனியும் பருத்திவீரன் படம் எப்படி உருவானது. அதில் யார் பணம் இருக்கிறது என்பது தொடர்பாக புட்டு புட்டு வைத்தனர். இதனால் ஞானவேல் ராஜா செய்வதறியாது திகைக்க ஆரம்பித்தார். அவர்களைத் தொடர்ந்து கரு.பழனியப்பன், பாரதிராஜா, பொன்வண்ணன் உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவாக இறங்கினர்.

கரு.பழனியப்பனின் ட்விஸ்ட்: இப்படி படைப்பாளிகள் மட்டுமின்றி ரசிகர்களும் அமீருக்கே ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக பராசக்தியில் சிவாஜிக்கு பிறகு ஒரு அறிமுக ஹீரோவுக்கு முதல் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றால் அது கார்த்திக்கு பருத்திவீரனில்தான் நடந்தது. அப்படிப்பட்ட படம் ஒரு கொடுத்த இயக்குநரை இப்படி அசிங்கப்படுத்தக்கூடாது. இதற்கு சிவக்குமார் குடும்பமும் அமைதியாக இருக்கக்கூடாது எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.

போலி வருத்தம்: மேலும் கரு.பழனியப்பன் தனது அறிக்கையில், 'ஞானவேல் ராஜாவை மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்ல வேண்டும்' என குறிப்பிட்டார். அவர் அறிக்கை வெளியிட்டு 18 மணி நேரத்துக்குள் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இருந்தாலும் அந்த வருத்தமும் போலி வருத்தம்தான் என்ற கண்டனங்களும் எழுந்திருக்கின்றன. இதனையடுத்து ஞானவேல் ராஜா டோட்டல் சைலெண்ட் ஆகிவிட்டார். அதேசமயம் சூர்யா, கார்த்தியும் வாய் திறக்காமல் இருந்தனர்.

கட்டியணைத்த சூர்யா?: பிரச்னை ஒருவழியாக ஓய்ந்த சூழலில் கலைஞர் 100 விழா திரைத்துறை சார்பில் நடத்தப்பட்டது. அதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் வைத்து அமீரை சூர்யா பார்த்ததாகவும்; அப்போது இருவரும் பரஸ்பரம் கட்டியணைத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் சூர்யாவுக்கும், அமீருக்கும் இடையே எந்தப் பஞ்சாயத்தும் இல்லை என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். மேலும் வாடிவாசல் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதும் உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில் அந்த விழாவில் கார்த்தியின் செயல்பாடு குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விழாவில் அமீரை பார்த்த கார்த்தி எதுவுமே பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாராம். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அமீரின் உறவை வளர்க்க அண்ணன் நினைக்கிறார்; ஆனால் தம்பியோ அறுத்தெரியும்படி நடந்துகொள்கிறாரே. அதுமட்டுமின்றி முதல் பட இயக்குநரை இப்படி அவமானப்படுத்தலாமா என்றும் கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக்கொண்டதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X