ரஞ்சித்துக்காக 'ஜிம்'மே கதி என்று கிடக்கும் கார்த்தி
சென்னை: கார்த்தி அட்டகத்தி ரஞ்சித்தின் படத்திற்காக எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கார்த்தி அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு முதலில் காளி என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் தற்போது அந்த பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரை வைக்கவிருக்கிறார்கள்.
புதிய பெயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஸ்லிம்
தன்னுடைய படத்தின் ஹீரோ ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்று ரஞ்சித் விரும்பினார். இதையடுத்து கார்த்தியிடம் கொஞ்சம் எடையை குறையுங்களேன் என்று கேட்டுக் கொண்டார்.

ஜிம்
ரஞ்சித் கேட்டுக் கொண்டதை அடுத்து எடையை குறைக்க கார்த்தி ஜிம்மே கதி என்று கிடக்கிறாராம். மேலும் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறாராம்.

காய்ச்சல்
எடை குறைக்கும் முயற்சியில் இறங்கிய கார்த்திக்கு காய்ச்சல் வந்து தானாக சில கிலோ எடை குறைந்துவிட்டது. எடையை குறைக்க உங்கள் அண்ணன் சூர்யாவிடம் டிப்ஸ் கேட்கலாமே கார்த்தி. அவர் தான் எடையை குறைத்து ஏற்றுவதில் வல்லவராயிற்றே.

ரஞ்சித்
சில கிலோக்கள் குறைத்துள்ள கார்த்தியின் அர்ப்பணிப்பு ரஞ்சித்தை மிகவும் கவர்ந்துள்ளது. எடையை குறையுங்கள் என்று நான் கூறியவுடன் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டார் கார்த்தி. அவர் உடற்பயிற்சி செய்வதுடன், உணவுக் கட்டுப்பாட்டிலும் உள்ளார். என் படத்தில் ஸ்லிம்மான கார்த்தியை நீங்கள் பார்ப்பீர்கள் என்று ரஞ்சித் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











