சத்தமே இல்லாமல் கார்த்தி படத்தில் நடந்த விஷயம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. மார்ஷல் இயக்குநர் கலக்குறாரே ப்பா
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வா வாத்தியார் திரைப்படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. நலன் குமாரசாமி அந்தப் படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக தமிழ் இயக்கத்தில் மார்ஷல் படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே தமிழ் இயக்கியிருந்த டாணாக்காரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தது. எனவே கார்த்தியை வைத்து இயக்கும் இப்படமும் சூப்பர் ரிசல்ட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர்.
சூர்யாவின் தம்பியான கார்த்தி தனது முதல் படமான பருத்தி வீரனில் இருந்தே கதைகளை தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருக்கிறார். அவர் ஏற்கனவே மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியதால் கூடுதல் அனுபவம் கதை தேர்வில் அவருக்கு இருக்கிறது. அறிமுகமான சமயத்தில் வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அவர்; இடையில் சறுக்கினார். பிறகு மீண்டும் மெல்ல மெல்ல எழுந்த அவர் ஜப்பானில் விழுந்தார். அதுமட்டுமின்றி விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட மெய்யழகன் படம் சுமாராக ஓடியதும் கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும்.

நலன் குமாரசாமியுடன் கூட்டணி: இதற்கிடையே சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த நலன் குமாரசாமியுடன் கூட்டணி அமைத்தார் கார்த்தி. படத்துக்கு வா வாத்தியார் என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கியமான வேடத்தை ஏற்றிருந்தார்கள். நலன் இயக்கத்திற்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள் ரசிகர்கள்.
தொடர்ந்து தாமதம்: படத்தின் பணிகள் எப்போதோ முடிந்துவிட்டன. ஆனால் ரிலீஸாவதில் தொடர்ந்து தாமதமாகிவந்தது. அதாவது இப்படத்தை தயாரித்திருக்கும் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பி தராததால்; கடன் கொடுத்தவர் நீதிமன்றத்துக்கு செல்ல; படம் ரிலீஸாவதற்கு இடைக்கால தடை விதித்தது கோர்ட். ஒருவழியாக அனைத்தும் முடிந்து படம் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வந்தது.
படத்துக்கு மோசமான விமர்சனம்: ஆனால் அப்போதும் வெளியாகவில்லை. கடந்த வருடத்தில் இப்படி பல முறை ரிலீஸ் ஆகாமல் ஏமாற்றிய வா வாத்தியார்; இந்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி சர்ப்ரைஸாக ரிலீஸானது. நலன் - கார்த்தி கூட்டணி என்பதால் பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். ஆனால் படம் முழுக்கவே சொதப்பி வைத்திருந்தார் இயக்குநர். படத்தில் எதுவுமே கனெக்ட் ஆகாததால் படத்தை படுதோல்வியாக்கினார்கள் ரசிகர்கள். பலரும் நலன் குமாரசாமி மீது தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்கள்.
விறுவிறு மார்ஷல்: அடுத்ததாக அவர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் படத்தில் நடித்துவருகிறார். இதில் வடிவேலுவும் முக்கியமான கேரக்டரை ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவலை இயக்குநர் தமிழ் வெளியிட்டிருக்கிறார். அதன்படி இதுவரை இரண்டு ஷெட்யூல்களை முடித்துவிட்டாராம் இயக்குநர். மொத்தமாக 48 நாட்களுக்கான ஷூட்டிங்கை முடித்திருக்கிறாராம். படமானது இந்த வருடத்தின் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications















