அடுத்த மாதம் சம்பவம்ரெடி.. கார்த்தியின் ‘வா வாத்தியார்’.. பிரதீப்பின் LIK.. வசூலை அள்ளும் படம் எது?

சென்னை: கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கும்
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'மெய்யழகன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உறவுகளின் பாசத்தை அழகாக சொல்லி இந்த திரைப்படம் கணிசமான வசூலை அள்ளியது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி 'கைதி 2' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி 'வா வாத்தியார்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் மாதம் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

Karthi Vaa Vaathiyaar LIK
Photo Credit:

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: அதே போல, விக்னேஷ் சிவன் இயக்கிய 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' கம்பேனி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு திரைப்படமான டியூட் திரைப்படம் வெளியானதால், இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 'எல்ஐகே' திரைக்கு வர உள்ளது. காதல், நகைச்சுவை கலந்த அறிவியல் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனின் முந்தைய வெற்றி படங்கள் வரிசையில் இடம்பெறும் என ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். டிசம்பர் மாதம் கார்த்தியின் வா வாத்தியார் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X