அந்த நடிகையை சைட் அடித்த கார்த்தி.. மனுஷன் செம சேட்டைக்காரரா இருந்திருக்காரே

சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இவைத் தவிர்த்து டாணாக்காரன் தமிழ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கார்த்தி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.

Karthi Talks about Amala At old interview Goes Trending on social Media

வந்தியத்தேன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.

ஜப்பான்: இந்த சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதால் ராஜுமுருகனின் இயக்கத்திற்கென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் படம் கடந்த வருட தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இதில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஏமாற்றம்: படத்தின் ட்ரெய்லர் நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தினாலும் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம கார்த்திக்கு என்னதான் ஆச்சு என்று கேட்க ஆரம்பித்தனர். முக்கியமாக இது ராஜுமுருகன் படம் மாதிரியே இல்லை அவ்வளவு போராக படம் செல்கிறது. படம் சுமார் ரகத்துக்கும் கீழேதான் என ஓபனாகவே சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்தனர்.

அடுத்த படங்கள்: இந்த சூழலில் கார்த்தி அடுத்ததாக கைதி 2, சர்தார் 2 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தின் மீதும் கார்த்தி ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதற்கிடையே 96 படத்தை இயக்கிய பிரேம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்துவருகிறார். அதேபோல் டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்திலும் ஒரு படத்தில் அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கார்த்தி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், “நடிகை அமலா மீது எனக்கு சிறு வயதிலிருந்தே மிகப்பெரிய க்ரஷ் உண்டு. இப்போவரைக்கும் அது இருக்கிறது. அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் அடையாறு அருகே ஹோட்டல் ஒன்றை நடத்திவந்தார். எப்போதும் அவரது ஹோட்டலில் பார்சல் வாங்குவதற்கு எங்கள் வீட்டு டிரைவரை அனுப்புவோம். ஆனால் இரவு நேரத்தில் அமலா அங்கு இருப்பார். அதனால் டிரைவருடன் நானும் சென்று பயங்கரமாக அமலாவை சைட் அடிப்பேன்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X