கொம்பன் பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் கார்த்தி!

சென்னை : நடிகர் கார்த்தி இப்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

இரும்புத்திரை, ஹீரோ என மிகச் சிறந்த படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் இதுவரை நடித்திராத வயதான தோற்றத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் படம் உருவாகி வருகிறது. ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் இதில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொம்பன் பட இயக்குனர் முத்தையா உடன் மீண்டும் நடிகர் கார்த்தி இணைந்து மிகக்குறுகிய காலத்திலேயே புதிய திரைப்படம் ஒன்றை நடித்து முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கைதி

கைதி

ஒரே மாதிரியான படங்களை கொடுக்காமல் வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி முன்னணி இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள் என பாரபட்சம் பார்க்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்றது. பொதுவாக தமிழ் படங்கள் என்றாலே கவர்ச்சியான கதாநாயகி, கட்டாயமாக ஐந்து பாடல்கள், காமெடி,ஆக்சன் என அனைத்தும் கலந்த கலவையான படங்களாக வெளிவந்து கொண்டிருக்க அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கைதி வழக்கமான மசாலாக்கள் எதுவுமில்லாமல் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கைதி வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் உடன் இணைந்து சுல்தான் என்ற பக்கா கமர்ஷியல் படத்தை கொடுத்த நடிகர் கார்த்தி இப்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

வந்தியத்தேவன்

வந்தியத்தேவன்

தமிழில் வரலாற்று சிறப்புமிக்க நாவல்களில் ஒன்றான கல்கியின் பொன்னியின் செல்வன் படமாக்க பலரும் முயற்சி செய்து அதே நடைபெறாமல் போக இப்போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து வருகிறார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வர மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா, சரத்குமார்,ஜெயராமன், விக்ரம் என பலர் இதில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று கொண்டுள்ளது. இப்பொழுது பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வனில் நடித்து வரும் அதே சமயம் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்திலும் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.

 வயதான தோற்றத்தில்

வயதான தோற்றத்தில்

இப்போதுள்ள டிஜிட்டல் உலகில் எவ்வாறெல்லாம் தில்லுமுல்லு செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நாசூக்காக தன்னுடைய படங்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி வரும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது சர்தார் என்ற படத்தை இயக்குகிறார். இதில் கார்த்தி இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் அதில் ஒரு கதாபாத்திரத்தில் கார்த்தி வயதான தோற்றத்தில் நரைத்த முடியுடன் நடிக்கிறார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க நடிகை சிம்ரன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சர்தார் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை பரவுவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது இந்த சூழலில் லாக்டவுன் காரணமாக படிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 கொம்பன் கூட்டணி

கொம்பன் கூட்டணி

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தொடர்ந்து பணியாற்றி வந்த கார்த்தி இப்பொழுது கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கிராமத்து கதைக் களத்தில் வீரமும் மானமும் நிறைந்த தமிழ் மண்ணின் படங்களாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வெற்றிபெற கார்த்தி மற்றும் முத்தையா முதல் முறையாக இணைந்த கொம்பன் மாபெரும் வெற்றி பெற்றது. மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையே இருக்கும் உறவை மிக அழகாக சொல்லி இருந்த கொம்பன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது.

Recommended Video

பிரபலங்கள் எதிர்க்கும் CINEMATOGRAPH ACT 2021 Explained in Tamil | ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா
அட்டகாச லட்சுமி மேனன்

அட்டகாச லட்சுமி மேனன்

ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் அட்டகாசமாக நடித்து இருப்பார் . இந்த மெகாஹிட் கூட்டணி தற்போது மீண்டும் இணைய படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது. இந்த முறையும் கிராமத்து பின்னணியை கதைக்களமாக கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. கொம்பன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது. மேலும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. முதற்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் முத்தையா திட்டமிட்டுள்ளார். சர்தார் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஆக உள்ளதால் அதற்கு முன்பாகவே குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் இதில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் பெயர் விபரங்கள் வெளியாக உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X