விருமனில் கொம்பன் கெட்டப்பில் நடிக்கும் கார்த்தி... தேனியில் பரபரக்கும் படப்பிடிப்பு!

சென்னை: நடிகர் கார்த்தி விருமன் படத்தில் கொம்பன் கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் வெற்றி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. உதவி இயக்குநராக கேரியரை தொடங்கிய நடிகர் கார்த்தி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமா கேரியரை தொடங்கிய நடிகர் கார்த்தி பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

கடைசியாக நடிகர் கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் வெளியானது. தற்போது சர்தார், விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படம் குறித்து டிவிட்டர் பக்கத்தில் சக நடிகர்களுடன் அவ்வப்போது சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகிறார் கார்த்தி.

சர்தாரில் டபுள் ஆக்ஷன்

சர்தாரில் டபுள் ஆக்ஷன்

இதேபோல் சர்தார் படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி. இந்நிலையில் நடிகர் கார்த்தியின் விருமன் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையாதான் தற்போது விருமன் படத்தை இயக்கி வருகிறார்.

Recommended Video

தமிழக முதல்வருக்கு Actor Karthi வைத்த கோரிக்கை | Filmibeat Tamil
கொம்பன் கெட்டப்பில்

கொம்பன் கெட்டப்பில்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொம்பன் படத்தில் நடித்தது போன்று பழைய தோற்றத்தில்தான் விருமன் படத்திலும் நடிகர் கார்த்தி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

முன்னணி நட்சத்திரங்கள்

முன்னணி நட்சத்திரங்கள்

மேலும் இப்படத்தில் அவர் கார்த்திக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார். 'விருமன்' படத்தின் படப்பிடிப்பு தேனியில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X