பாட்டும் நானே.. பாடகனும் நானே!
சென்னை: நடிகர் கார்த்தி தான் நடித்து வரும் பிரியாணி படத்தின் மூலம் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகர் கார்த்தி வெங்கட் பிரபுவின் பிரியாணி படம் மூலம் பாடகராகியுள்ளார்.

நடிகர், பாடகர் கமல்
கமல் நடிப்பில் மட்டுமின்றி பாட்டு பாடுவதிலும் வல்லவர். அவர் தனக்காக மட்டுமல்லாது அஜீத் குமார் உள்ளிட்ட பிற நடிகர்களுக்காகவும் பாடியுள்ளார்.

25வது பாடலை பாடவிருக்கும் விஜய்
ரசிகன் படத்தில் பாம்பே சிட்டி என்ற பாடலை பாடிய விஜய் தொடர்ந்து பல பாடல்கள் தனக்காகவும், சூர்யாவுக்காகவும் பாடினார். துப்பாக்கி படத்தில் உள்ள கூகுள் கூகுள் அவருடைய 24வது பாடலாகும். விரைவில் 25வது பாடலை ஜிவி பிரகாஷ் இசையில் பாடுகிறார்.

வாலிபனானதும் பாடகனான சிம்பு
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு வாலிபனாக 'சொன்னால் தான் காதலா' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த பாட்டையும் அவரே பாடியிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் பெரும்பாலும் தனக்காகவும், சில நேரங்களில் பிற நடிகர்களு்ககாகவும் பாடி வருகிறார்.

தனுஷும் பாடகரானார்
நடிகர் தனுஷ் பாடகராக ட்ரை பண்ணிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

கார்த்தியும் பாடுகிறார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரியாணி படத்தில் நடித்து வரும் கார்த்தி அப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அவருடன் பிரேம்ஜி அமரனும் பாடியுள்ளார். பாட்டு எப்படி என்று கேட்ட பிறகு சொல்வோம்.


Click it and Unblock the Notifications











