»   »  மீண்டும் காக்கி யூனிஃபார்முக்கு மாறும் கார்த்தி!

மீண்டும் காக்கி யூனிஃபார்முக்கு மாறும் கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்த்தி இப்போது தனது உறவினர் நிறுவனமான ட்ரீம்வாரியர்ஸ் தயாரிப்பில் காஷ்மோரா படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கார்த்தி படங்களிலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. கார்த்திக்கு ஜோடியாக நயன் தாராவும், ஸ்ரீத்வ்யாவும் நடிக்கிறார்கள்.

பில்லி சூனிய கதை என சொல்லப்படும் காஷ்மோராவில் சுமார் கிராபிக்ஸில் மிரட்டியிருக்கிறார்களாம். மன்னர், மொட்டை கேரக்டர், அடியாள் என பல கெட்டப்களில் வருகிறாராம்
கார்த்தி. கார்த்தியின் கெட்டப்கள் ரகசியங்களாக பாதுகாக்கப்படுகின்றன.

 Karthi to wear police uniform again

காஷ்மோராவை முடித்துக்கொடுத்துவிட்டு மணிரத்னம் படத்தில் பிஸியான கார்த்தி, அடுத்து நடிக்கவிருப்பது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில். இந்த படத்தில் மீண்டும் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டுகிறார்.

சதுரங்கவேட்டை பாணியில் மோசடிகள் பற்றிய படம் தானாம் இது. மணிரத்னம் படத்துக்காக மிலிட்டரி
ஹேர்கட்டில் இருக்கும் கார்த்தி அதன் காரணமாகவே வெளியில் தலைகாட்ட மறுக்கிறாராம்.

English summary
Karthi is again wearing police uniform for a movie directed by Sathuranga Vettai Vinodh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil