"கார்த்தியைப் பார்த்ததுமே காதலில் விழ பெண்கள் ஏங்குவார்கள்"… தேவ் பட இயக்குனர் ரஜத் நம்பிக்கை!
தேவ் திரைப்படத்தில் கார்த்தி செம ஸ்டைலிஷாக இருப்பார் என சொல்லப்படுகிறது
Recommended Video

சென்னை: நடிகர் கார்த்தி தேவ் திரைப்படத்தில் ஸ்டைலிஷாக இருப்பார் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் தேவ் திரைப்படம் கார்த்தியின் திரைப்பயணத்தில் ஸ்டைலிஷ் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.
காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல் ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்தமாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. ராமலிங்கம் என்ற பெயருடைய கார்த்தி முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ்வின் மீதுள்ள பற்று காரணமாக தேவ் என்ற பெயரை தன் பெயரோடு சேர்த்துக்கொள்கிறார். என ரஜத் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் கார்த்தி பெரும்பான்மையான காட்சிகளில் ஒரு பைக்கோடு இருப்பாராம். அதனால், பைக்கில் புதுமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக பிரபல நிறுவனத்தின் ஜிஎஸ்1200 வகை பைக்கை தேர்ந்தெடுத்துள்ளனர். பல கம்பெனியின் விலையுயர்ந்த பைக்குகளை பரிசோதித்து, இறுதியில் இதை முடிவுசெய்துள்ளனர். கார்த்தியின் உடல்வாகிற்கு ஏற்றதாக இந்த பைக் இருக்கும் என இயக்குனர் ரஜத் தெரிவித்துள்ளார். அந்த பைக் சந்தைக்கு வருவதற்கு முன்பே பிரத்தியேகமாக ஆர்டர் செய்து படமாக்கியுள்ளனர்.

செம்ம ஸ்டைலிஷாக கார்த்தியை காட்ட வேண்டும் என்பதற்காக பதினைந்து லுக் டிசைன் செய்தனாராம். கார்த்தியின் உடை, லெதர் ஜாக்கெட், ஷூ, அவரின் தாடி என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக வெயிட் போட்ட கார்த்தி இப்படத்திற்காக ஒரே மாதத்தில் எடையை குறைத்து ட்ரிம் ஆகியிருக்கிறார்.
படத்தின் முதல் காட்சியில் கார்த்தியை பார்த்த உடனே பெண்கள் காதல்வயப்படும் அளவிற்கு வசீகரமாக கார்த்திக் இருப்பார் என ரஜத் தெரிவித்துள்ளார். ரகுல்ப்ரீத் சிங் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன், விக்னேஷ்காந்த், அம்ருதா, வம்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்தி மற றும் நிக்கி கல்ராணி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











