»   »  நடிக்க வருகிறார் சூர்யாவின் தம்பி!

நடிக்க வருகிறார் சூர்யாவின் தம்பி!

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நாயகர்களில் ஒருவரான சூர்யாவின் தம்பி கார்த்தியும் கதாநாயகனாக களம்இறங்குகிறார்.

நவரச நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா தமிழ் சினிமாவில் தனது தனி பாணி நடிப்பால் சகல தரப்பு ரசிகர்களையும்வளைத்துப் போட்டுள்ளார். முன்னணி நாயகர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.

இவருக்கு அடுத்த படியாக சூர்யாவின் தம்பியான கார்த்தியும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். சூர்யாவைப் போலவே படுஸ்மார்ட்டாக இருக்கும் கார்த்தி, சூர்யாவை விட உயரமாக, சிவப்பாக இருக்கிறார். அப்பா மற்றும் அண்ணனின் டிரேட் மார்க்புன்னகை இவரது முகத்திலும் அப்படியே இருக்கிறது.

கார்த்திக்கு 27 வயதாகிறது. பி.இ. முடித்துள்ள கார்த்தி, தொழிற்சாலைப் பொறியியலில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். இவ்வளவுபடித்தவரான கார்த்திக்கு சினிமா மீதான தாகம் அதிகரிக்கவே அவரை மணிரத்தினத்தின் உதவியாளராக சேர்த்து விட்டார்சிவக்குமார்.

இயக்குநராகப் பயிற்சி எடுத்த கார்த்தி, மணிரத்னத்துடன், "ஆய்தஎழுத்து படத்தில் பணியாற்றினார். இதோ இப்போது நடிகராகஅவதாரம் எடுக்கிறார்.

"மெளனம் பேசியதே, "ராம் ஆகிய வெற்றிப் படங்களுடன் கோலிவுட்டில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள இயக்குநர் அமீரின்மூன்றாவது படமான "பருத்தி வீரன் படத்தில் கார்த்திதான் கதாநாயகன்.

கார்த்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சிவக்குமாரின் வீட்டில் நடந்தது. இதில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, அமீர்,இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார்த்தி குறித்து அமீரிடம் கேட்டபோது, சிவக்குமார் சார் வீட்டிற்கு நான் அடிக்கடி வருவேன். அப்போதெல்லாம் கார்த்தியைப்பார்த்துள்ளேன். அவரை நடிக்க வைக்க அனுமதியுங்கள் என்று கூட கேட்டுள்ளேன். ஆனால் சார் மறுத்து விட்டார்.

இந்த நிலையில்தான், எனது 3வது படமான பருத்தி வீரன் படத்துக்காக நல்ல துடிப்பான இளம் ஹீரோவைத் தேடிக்கொண்டிருந்தேன். மீண்டும் கார்த்திதான் எனது மனதில் வந்தார். இந்த முறை சிவக்குமார் சாரை சமாதானப்படுத்தி அவரதுசம்மதத்தைப் பெற்று விட்டேன்.

எனது படத்திற்கு மிகவும் பொருத்தமானவர் கார்த்தி. ஏற்கனவே ஒரு நடிகர் (சிவக்குமார்) இந்த வீட்டில் சாதனை படைத்துவிட்டார். இன்னொருவர் (சூர்யா) சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். அவர்களைப் போல கார்த்தியும் சாதனை படைப்பார்என்றார் அமீர்.

புது ஹீரோ என்ன சொல்கிறார்? நான் இயக்குநராக வேண்டும் என்று தான் ஆசையாக இருந்தேன். இப்போது நடிகனாகி விட்டேன்.எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோது உடனே ஓ.கே. சொல்லி விட்டேன் என்றார் புன்னகையுடன்.

படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. டிசம்பரில் படத்தை வெளியிடத் திட்டமாம். கார்த்தியின் ஜோடியாக புதுமுகத்தை நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக தமிழ் நன்கு பேசத் தெரிந்த தமிழ்ப் பெண்ணாக பார்த்துக் கொண்டிருக்கிறாராம் அமீர்.

உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு யாராச்சும் இருந்தா அமீருக்கு தகவல் கொடுங்களேன்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil