இளவரசரே என் பணியும் முடிந்தது… பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்த வந்தியத்தேவன்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்தி, தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இத்தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன் ஜெயம் ரவி தனது படப்பிடிப்பை முடித்த நிலையில் தற்போது கார்த்தி முடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் குவாலியரில் நடைபெற்று வருகிறது. குவாலியர் கோட்டை 9ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். குவாலியர் நகரம் அரண்மனைகள் மற்றும் கோவில்களுக்கு பெயர் பெற்றதாகும். இங்குள்ள சாஹூ பகுகா கோவிலில் அரிய வகையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.

இளவரசரே என் பணியும் முடிந்தது
இப்படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இளவரசி த்ரிஷா, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது இளவரசே என்று பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவி, என் பணியும் முடிந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜெயம்ரவியும் முடித்துவிட்டார்
நடிகர் ஜெயம்ரவி தனக்கான படப்பிடிப்பை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி முடித்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். நடிகர் ஜெயம் ரவி அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயம்ரவியை தொடர்ந்து நடிக்கும் கார்த்தி தனக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்.

3 மொழிகளில்
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

12 பாடல்கள்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல் இருப்பதாகவும், இதில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எட்டு பாடல்களை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சர்தாரில்
நடிகர் கார்த்தி, பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் கார்த்தி, நீண்ட தலைமுடி, நீண்ட தாடியுடன் வயதான தோற்றத்தில் தத்ரூபமாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது.

விருமன் படத்தில்
இயக்குனர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. விருமன் என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











