»   »  பருத்தி வீரன் சிடி தெருவில் போட்டு விற்பனை:கையும், களவுமாக பிடித்த கார்த்தி!

பருத்தி வீரன் சிடி தெருவில் போட்டு விற்பனை:கையும், களவுமாக பிடித்த கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை நகர தெருக்களில் பிளாட்பாரத்தில் குவித்து வைத்து பருத்தி வீரன் பட திருட்டு விசிடிக்கள் விற்பதை அப்படத்தின் நாயகன் நடிகர்கார்த்தி கையும் களவுமாக பிடித்து போலீஸில் புகார் கொடுத்தார்.

சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில், அமீர் இயக்கத்தில் வெளியாகியுள்ள பருத்தி வீரன் சூப்பர் ஹிட் படமாக, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் விற்பனைக்கு வந்து விட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் படம்அபாரமாக இருப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், திருட்டு விசிடி விற்பனையும் படு சூடாக நடந்து வருகிறது.

இதையடுத்து நடிகர் கார்த்தி சென்னை நகரில் திருட்டு விசிடி விற்கும் பகுதிகளுக்கு திடீரென்று சென்றார். அங்கு பிளாட்பாரத்தில் போட்டு வைத்துபருத்தி வீரன் சிடிக்களை கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டார் கார்த்தி.

சிலரை அனுப்பி அந்த கேசட்டுகள் சிலவற்றை வாங்கிய அவர் நேராக கூடுதல் காவல் ஆணையர் ஜாங்கிட்டை சந்தித்து புகார் கொடுத்தார்.இதையடுத்து உடனடியாக தனிப்படையை அமைத்த ஜாங்கிட் ஒரு கேசட் விடாமல் அள்ளிக் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயிரக்கணக்கான கேசட்டுக்களைப் பறிமுதல் செய்தனர். இதேபோலதமிழகம் முழுவதும் நடந்த வேட்டையில் ஆயிரக்கணக்கான பருத்தி வீரன் பட திருட்டு விசிடிக்கள் சிக்கின.

திருட்டு விசிடி விவகாரம் குறித்து கார்த்தி கூறுகையில், பல கோடி பணத்தைப் போட்டு எடுத்த படம் இது. எங்களது பல மாத உழைப்பு இதன்பின்னணியில் உள்ளது.

கஷ்டப்பட்டு எடுத்த படத்தின் திருட்டு விசிடியை பிளாட்பாரத்தில் போட்டு 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் விற்றதைப் பார்த்தபோது பெரும்அதிர்ச்சியாகி விட்டது. கொதித்துப் போய் விட்டேன்.

திருச்சியில் ஒரு தியேட்டரிலேயே திருட்டு விசிடியை போட்டுக் காண்பிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. அதுகுறித்தும் புகார் கொடுத்துள்ளேன்.தலமைச்சர் தனிப்பிரிவிலும் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளேன் என்றார் கார்த்தி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil