ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில் விஜயகாந்தையே கடித்துவிட்டார் கார்த்திக்.

சமீபகாலமாக தொடர் தோல்விகளால் வெறுப்படைந்துவிட்ட விஜய்காந்த், தனது பக்கம், பக்கமான வசனம்,ஊருக்கு உபதேசத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நல்ல கதையாகத் தேடினார்.

மம்மூட்டி நடித்து சூப்பர் ஹிட்டான கிரானிக் பேச்சிலர் கதையை யாரோ சொல்ல, அதன் டைரக்டர் சித்திக்கைப்பிடித்து தனக்கு ஒரு படம் பண்ணச் சொன்னார். இதையடுத்து கிரானிக் பேச்சிலர் படத்தையே விஜய்காந்தைவைத்து தமிழில் எடுப்பது என்று முடிவானது.

படத்தை விஜய்காந்தே தயாரிக்கிறார்.

இதில் இன்னொரு ஹீரோ கேரக்டருக்கு கார்த்திக்கைப் பிடித்துப் போட்டார் கேப்டன். சூட்டிங்கும் தொடங்கியது.ஆனால், அட்வான்ஸை வாங்கிக் கொண்டு அல்வா கொடுப்பதில் வல்லவரான கார்த்திக் விஜய்காந்துக்கும் டேக்காகொடுத்தார்.

கார்த்திக்கினால் பிரச்சனையைச் சந்தித்த பல தயாரிப்பாளர்களிடம் நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் சமரசம்பேசியவர் விஜய்காந்த். இப்போது தனக்கே கார்த்திக் எரிச்சல் கொடுத்ததால், அவரை படத்தில் இருந்துதூக்கிவிட்டார்.

அவருக்குப் பதிலாக வீட்டில் நகம் கடித்து சும்மா பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் பிரபு தேவாவைப் புக்செய்துள்ளார்.

நகைச்சுவை கலந்த பாத்திரம் என்பதால் தான் கார்த்திக்கை போடுவது என முடிவு செய்யப்பட்டதாம். இப்போதுபிரபு தேவா வந்துள்ளதால், இரண்டு டான்ஸ்களையும் அவருக்கு வைக்கப் போகிறார்களாம். அதற்காககதையையும் லேசாகத் திருத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கார்த்திக்குக்கு அப்படி என்ன தான் பிரச்சனை?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X