ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நவரச நாயகன் என்ற அடைமொழியுடன் பல படங்களை தன் வெற்றிலை குதப்பல் குரலால் வெற்றி பெறச்செய்தவர் கார்த்திக்.

இவருக்கு சமீப காலமாக தூங்கும் வியாதி ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி படப்பிடிப்புக்கு வராமல் டபாய்த்துக்கொண்டிருந்தார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த புரடியூசர் பட்டாளம் இவரைக் "கேப்டன்" (விஜய்காந்த்) கோர்ட்முன் நிறுத்தியது.

இயக்குநர் கேயார் இயக்கிவரும் "என்ன பெயர் வைக்கலாம்" என்ற படத்தில் கார்த்திக் நடிக்கிறார். ஆனால்,பேசியபடி நடித்துக் கொடுக்க வராமல் இதோ வர்ரேன், வந்துக்கிட்டே இருக்கேன், வந்துட்டேன் என்று சொல்லி"பிலிம்" காட்டியிருக்கிறார் கார்த்திக்.

பிறகு ஒரு வழியாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவர் சிறிது நேரம் நடித்து விட்டு. ஒரு ஒன் அவர் தூங்கிக்கிறேன்என்றாராம். ஒன் அவர் கழித்து எழுப்பினால், "எனக்கு, தூக்கந்தூக்கமா வர்ர்து". நாளைக்கு சூட்டிங்வெச்சுக்கலாமே என்றாராம்.

கடுப்பான கேயார், அதே உஷ்ணத்துடன் தன் சூட்டிங் சகாக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தினார். பிறகுஅதை நடிகர் சங்கத்தில் சமர்ப்பித்து நீங்கள் தான் நீதியை நிலைநாட்ட வேண்டும் விஜயகாந்திடம்வேண்டியிருக்கிறார்.

இதையடுத்து கேப்டன் நவரச நாயகனுக்கு சம்மன் அனுப்பினார். ஆனால் அப்போதும் தூக்கத்தின் ஏக்கத்தில்இருந்த கார்த்திக் வரமறுத்தார். பிறகு சில ஆட்களை அனுப்பி கையோடு கார்த்திக்கை நடிகர் சங்கத்திற்கு அழைத்துவந்தார்கள்.

பிறகு விஜயகாந்த் கார்த்திக்கிடமும், அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களான கேயார் மற்றும் நளினியின்தம்பி பாஸ்கர் ஆகியோரிடம் விசாரித்து உண்மை நிலையை அறிந்தார்.

பிறகு நளினி தம்பியிடம் வாங்கிய ரூ.13 லட்சம் அட்வான்சை உடனடியாகத் திருப்பித் தருவதுடன் கேயாரின்படத்தை விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனை போதாதென்று நினைத்த கேயார், கார்த்திக்கை தன் படத்திலிருந்து தூக்குவதாக அறிவித்தார்.

இது தவிர "க்ளிக்" படத்திற்கும் சரிவர ஒத்துழைப்பு கொடுக்கமால் சதா தூங்கி வழிவதாக புகார்செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X