ஹீரோ .. ஹீரோ ..
செக் மோசடி வழக்கில் நடிகர் கார்த்திக் சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகர் கார்த்திக்கும் அவரது மனைவி குமாரியும் சஞ்சய் என்பவரிடம் ரூ.8 லட்சம் கடன்வாங்கியிருந்தனர். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காக செக் கொடுத்திருந்தனர்.
ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்து விட்டது. இதைத் தொடர்ந்து கார்த்திக்மற்றும் குமாரி ஆகியோர் மீது சென்னை-ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சஞ்சய் வழக்குத் தொடர்ந்தார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் கார்த்திக்கும் குமாரியும்நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கார்த்திக் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனக்கு உடல் நிலை சரியில்லாதகாரணத்தால்தான் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்று விளக்கம் அளித்தார் கார்த்திக். அதை ஏற்றநீதிபதி அலமேலு, கார்த்திக் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்தார்.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த கார்த்திக்கை நிருபர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம் கார்த்திக்பேசுகையில்,
கடன் வாங்கியதை நான் எப்போதும் மறுக்கவில்லை. மறைக்கவும் இல்லை. வாங்கிய பணத்தில்இதுவரை ரூ.4.5 லட்சம் வரை திருப்பிக் கொடுத்துவிட்டேன். மீதமுள்ள பணத்தை விரைவில்தருகிறேன் என்றும் கூறியிருந்தேன். ஆனால் என் மீது வழக்குப் போட்டுள்ளார்கள்.
பணம் தருகிறேன் என்று கூறியும் வழக்குப் போட்டு விட்டார்கள். பிறகு வந்து தவறுக்குவருந்துகிறோம் என்கிறார்கள்.
கோர்ட்டில் வழக்கு போட்ட பின் வருந்தி என்ன பயன்? கோர்ட்டை மதித்துத்தான் நான் இன்றுவந்துள்ளேன். இது எனக்கு ஒரு நல்ல பாடம் என்றார் கார்த்திக்.


Click it and Unblock the Notifications











