twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்களை குழப்பும் மக்கள்!

    By Staff
    |

    அழையா விருந்தாளியாக அதிமுகவுக்குப் போய் அவமானமடைந்த கார்த்திக் திடீரென சமூக தொண்டில் இறங்கியுள்ளதோடு,விஜயகாந்துக்கு இணையான கூட்டத்தைக் கூட்டி பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளார்.

    ராஜபாளையத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு கூடிய கூட்டம் விஜயகாந்த் மற்றும்ஆளும்கட்சித் தரப்பை நிறையவே யோசிக்க வைத்துள்ளது. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு,விழாவே பாதியில் ரத்தானது.

    இவ்வளவு கூட்டத்தை போலீசாரும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. இதனால் போதிய பாதுகாப்புக்கும் ஏற்பாடுசெய்யவில்லை.

    பாரதிராஜாவின் "அலைகள் ஓய்வதில்லை படத்தில் மீசை முளைக்காத பையனாக அறிமுகமானவர் நடிகர் முத்துராமனின்மகனான கார்த்திக். சூப்பர் ஹிட்டாக ஓடிய இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்திக் முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார்.

    கடந்த சில ஆண்டுகளாக போதை வஸ்துக்களுக்கு அடிமையானார். சினிமா வாய்ப்புக்களை தானே கெடுத்துக் கொண்டகார்த்திக்கு, பல பக்கத்தில் இருந்தும் கடன் நெருக்க, மெல்ல அரசியலுக்கு வர முயன்று வருகிறார்.

    கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவில் சேர ஆசைப்பட்டு போயஸ் கார்டனுக்கு நடிகர் ராதாரவியுடன் சென்றார்.ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் இல்லக் கதவு இவருக்குத் திறக்கவில்லை. இத்தனைக்கும் சசிகலாவின் முக்குலத்தோர்சமூகத்தைச் சேர்ந்தவர் தான் கார்த்திக்.

    இதையடுத்து ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்துக்கு வந்த கார்த்திக் அதிமுகவில் இணையப் போவதாக சொல்லிவிட்டுப்போனார். ஆனால், அவரை கடைசி வரை கட்சியில் சேர்க்காமல் அவமானப்படுத்தினார் ஜெயலலிதா.

    இந் நிலையில் தனது ரசிகர்களை ஒன்றிணைக்க ஆரம்பித்தார். குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகஇளைஞர்கள் மத்தியில் ஒரு காலத்தில் தனக்கு இருந்த மவுசு நினைவுக்கு வர, அங்கே கிளம்பிப் போனார் கார்த்திக். அந்தமன்றங்களுக்கு உயிர் தந்து, ஒன்றிணைத்து சரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

    இந்த சரணாயலம் அமைப்பின் சார்பில் ராஜபாளையத்தில் நேற்று இவர் நடத்திய விழா அவரது அரசியல் ஆசையை வெளிச்சம்போட்டது.

    நேற்று நடந்த இந்த விழாவுக்குக் கூடிய கூட்டம் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ராஜபாளையம் வந்த, கார்த்திக் அங்குள்ளதேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் மேடை ஏறினார்.

    கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கவே, மேடை தள்ளாடியது. போலீசாரும் போதிய அளவில் இல்லாததால், நீண்ட நேரம் தான்அங்கிருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்த கார்த்திக், பெயருக்கு ஒரு ஊனமுற்ற சிறுவனுக்கு 3 சக்கர சைக்கிளையும், ஒருபெண்ணுக்கு தையல் மிஷினையும் வழங்கிவிட்டு மைக்கை பிடித்தார்.

    நான் முதலில் நடித்த படம் அலைகள் ஓய்வதில்லை. அதற்குப் பிறகு மற்றொரு அலையை இங்கே பார்க்கிறேன். என் தந்தைவிட்டுச் சென்ற கடமைகளை நான் நிறைவேற்றுவேன். எந்த நேரம் அழைத்தாலும் நான் உங்களை தேடி வருவேன் (அப்படிப்போடு). நமது மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

    அதற்காக தான் இந்த சரணாலயம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளேன்... இப்படிப் பேசிக்கொண்டிருந்த போது திடீரெனதள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கார்த்திக்கின் முகத்தில் மைக் விழுந்தது.

    கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று தோன்றியதால் ரசிகர் மன்ற நிர்வாகிகளும், போலீஸாரும் கார்த்திக்கை பத்திரமாகஅழைத்து சென்று காரில் ஏற்றி விட்டனர். இதனால் தனது முதல் நிகழ்ச்சியையே கார்த்திக்கால் பாதியில் முடிக்க வேண்டிய நிலைஏற்பட்டது.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் கார்த்திக்கின் இந்த விழாவுக்கு கூடிய கூட்டம் குறித்து ஆளும்கட்சித் தலைமைக்கு உளவுப் பிரிவும்போலீசாரும் விளக்கமாகவே குறிப்பை அனுப்பியுள்ளனர்.

    அதிமுகவின் முக்குலத்தோர் ஓட்டு வங்கியில் ஓட்டை போடும் வேலையை கார்த்திக் தொடங்கியிருப்பதாக போலீசார் நோட்அனுப்பியுள்ளனர்.

    இதனால் அதிமுக ஒரு பக்கம் டென்சனில் இருக்க, மறுபக்கம் விஜயகாந்த் தரப்புக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளார் கார்த்திக்.

    கார்த்திக்கை வரவேற்று ராஜபாளையத்தில் அவரது மன்றத்தினர் வைத்திருந்த பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களில் இருந்தவாசகங்கள் தான் விஜயகாந்த் தரப்பின் கொதிப்பிற்கு காரணம்.

    "தெரியாமல் போட்டியிடும் மனிதா, தேவரினத்தை வெல்வதென்ன எளிதா?... இந்த வாசகங்கள் விஜய்காந்தை குறி வைத்தேஎழுதப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

    மேலும் கார்த்திக்கை வரவேற்று, முக்குலத்தோரின் முதல்வரே..., மறவர் குல மாணிக்கமே... என்றெல்லாம் சுவர்விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தன.

    இதுவரை விஜய்காந்துக்கு மட்டுமே கூடி வந்த பெருங் கூட்டம் இப்போது கார்த்திக்குக்கும் கூடியுள்ளதைப் பார்த்தால், அரசியல்ஆசையோடு வரும் நடிகர்களை நன்றாகவே குழப்ப மக்கள் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது!!

      Read more about: people confusing actors
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X