Actor Karthi: ஏப்ரல் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 பட சூட்டிங்.. மாஸ் காட்டும் கார்த்தி!

சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த சூப்பர் கூட்டணியில் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படத்தை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். இந்த கூட்டணி மேஜிக் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் சொதப்பியது. இந்நிலையில் அடுத்தடுத்து வா வாத்தியாரே, மெய் அழகன் என இரு படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படங்களை நலன் குமாரசாமி மற்றும் 96 பட இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் இயக்கி வருகின்றனர். இதில் வா வாத்தியாரே படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

இதையடுத்து பிரேம்குமார் இயக்கத்தில் தன்னுடைய 27வது படத்திலும் நடித்துவருகிறார் கார்த்தி. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு மெய்யழகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அரவிந்த்சாமி முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களிலும் நடிகர் ராஜ்கிரண் நடித்து வருகிறார். தறபோது மெய்யழகன் படத்தின் சூட்டிங்கிற்காக கும்பகோணத்தில் கார்த்தி நடித்து வருகிறார். கைதி படத்தை போலவே இந்தப் படத்திலும் கார்த்திக்கு ஜோடி இல்லை என்று கூறப்படுகிறது.

Actor Karthis Sardar 2 movie shooting will be starts on April 2024

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். மினிமம் கேரண்டி ஹீரோ என்ற பெயர் கார்த்திக்கு கோலிவுட்டில் உண்டு. அடுத்தடுத்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார், பொன்னியின் செல்வன் 2 என வெற்றிப்படங்களை கொடுத்திருந்த கார்த்திக்கு கடந்த தீபாவளியில் வெளியான ஜப்பான் படம் கைக்கொடுக்கவில்லை. ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர தவறிய நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

கார்த்தி 26 & கார்த்தி 27 படங்கள்: இதில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி கமிட்டாகியுள்ள கார்த்தி 26 படத்தில் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு வா வாத்தியாரே என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ராஜ்கிரணும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே 96 பட இயக்குர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்தின் சூட்டிங் கும்பகோணத்தில் துவங்கியுள்ளது. தொடர்ந்து காரைக்குடியிலும் இந்தப் படத்தின் சூட்டிங் தொடாந்து 40 நாட்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

சூர்யா தயாரிப்பு: சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை என்று கூறப்படுகிறது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இந்த இரு படங்களின் சூட்டிங்கிலும் அடுத்தடுத்து கார்த்தி பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் சர்தார் 2 படத்தின் சூட்டிங்கில் கார்த்தி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சர்தார் படத்தை போலவே இந்தப் படமும் ஆக்ஷன் ஸ்பை த்ரில்லராக உருவாகவுள்ளது.

சர்தார் 2 படம்: முன்னதாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. படத்தில் இரட்டை வேடங்களில் முன்னாள் ரா ஏஜெண்ட் மற்றும் அவரது மகன் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார். படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் சர்தார் 2 படம் குறித்து முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து தீரன் 2 மற்றும் கைதி 2 ஆகிய படங்களிலும் கார்த்தி நடிக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X