'டுபாக்கூர்' என்று ஒதுக்கிய நடிகைகள்! - கருணாஸ்ஆவேசம்

By Sudha

Karunaas
நான் நடித்த படங்களை 'டுபாக்கூர்' என ஒதுக்கித் தள்ளிய நாயகிகள் பின்னர் அதற்காக வருத்தப்பட்டனர் என்றார் நடிகர் கருணாஸ்.

கருணாஸ் புதிதாக நடித்துள்ள அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:

சினிமாவில் வில்லனாகவும், கவுரவ வேடத்திலும் நடித்த பலபேர் கதாநாயகர்களாகி உள்ளனர். ஆனால் காமடியன்கள் மட்டும் கதாநாயகர்களாக முடிவதே இல்லை.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் இருந்து இப்படித்தான். இப்போது ஓரிரு காமெடி நடிகர்கள் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தாலும், திரும்பவும் காமெடிக்கே போய்விடும் நிலைதான் உள்ளது.

நடிக்க மறுத்த சிம்ரன்...

நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கு நாயகிகள் தேடி ரொம்ப சிரமப்பட்டேன். சிம்ரனிடம் கூட கேட்டுப் பார்த்தோம். அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

நிறைய கதாநாயகிகளிடம் என்னுடன் ஜோடி சேரும்படி கேட்டேன். உடன்பாடு இல்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார்கள். ஆனால் நடிக்க விரும்பாததற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை. நான் நடிப்பது டுபாக்கூர் படம் என்று சில நடிகைகள் கூறியுள்ளனர்.

திண்டுக்கல் சாரதி படம் ஹிட்டானதும் அதில் நடிக்க மறுத்த கதாநாயகி ஒருவர் 'ஐயோ அதில் நடித்து இருக்கலாமே தப்புசெய்துவிட்டேனே' என வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். அப்படி வருத்தமானதே எனக்கு கிடைத்த பெரிய வெற்றி.

முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். யாருக்கும் நான் கெடுதல் செய்வது கிடையாது. எனவேதான் எனக்கு ஜோடியாக அழகான நடிகைகள் அமைகிறார்கள். முதல் படத்தில் கார்த்திகா நடித்தார். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நவ்னித் கவுர் (அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்தவர்) நடிக்கிறார்...." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X