»   »  கருணாஸும் இனி ஹீரோவாம்!

கருணாஸும் இனி ஹீரோவாம்!

Subscribe to Oneindia Tamil

இம்சை அரசன் மூலமாக வடிவேலு சூப்பர் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியது தமிழ் காமெடியன்கள்மத்தியில் ஹீரோ ஆசையை அப்படியே அள்ளி விட்டு விட்டது. அடுத்து கருணாஸும் ஹீரோவாகப்போகிறாராம்.

வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் வசூலில் சக்கைப் போடு போட்டது. அடுத்து விவேக் அட்டகாசம்செய்துள்ள சொல்லி அடிப்பேன் வசூலில் கில்லி அடிப்பேன் என சொல்ல வருகிறது. இதைப் பார்த்து பலகாமெடியன்களுக்கும் ஹீரோ ஆசை வந்து விட்டதாம்.

அதிலும் கருணாஸுக்கு ரொம்பவே வந்து விட்டதாம். அடிக்கடி தன் செட்டு ஆட்களிடம் எல்லாம், ஏம்பா எம்மூஞ்சி கூட ஹீரோ கணக்காதானே கீது என்று கேட்டு வாங்கி புளகாங்கிதமடைந்து கொள்கிறாராம்.

அவரது பேராவலை (பேராபத்து?) பார்த்த ஒரு கை, அண்ணே, பேசாம நீங்களும் ஈரோவாயிடுங்கண்ணேஎன்று தூண்டி விட்டு விட்டதாம். அது இப்போது பெரும் நெருப்பாக மாறி கருணாஸை கலக்க ஆரம்பித்துவிட்டதாம்.

தனது நெருங்கிய வட்டார லெலவில் இப்போது தான் ஹீரோவாக நடித்தால் எந்த வேடத்தில் நடிக்கலாம்,கெட்டப்பில் என்ன சேன்ஞ்ச் பண்ண வேண்டும் என ஆலோசனை மேற்கொண்டுள்ளாராம் கருணாஸ்.

அத்தோடு தான் இதுவரை நடித்த படங்களின் உதவி இயக்குநர்கள் சிலரையும் ரகசியமாக வரவழைத்துடிஸ்கஷன் செய்து வருகிறாராம். கூடிய விரைவில் நல்ல செய்தியாக (யாருக்கு?) வருமாம். தான் ஹீரோவாகநடித்தால் ஆக்ஷன் பிளஸ் காமெடி கலந்ததாக கதை இருக்க வேண்டும் (அதாவது ரசினி மாதிரி!) எனகண்டிஷனாக சொல்லியுள்ளாராம் கருணாஸ்.

இது ஒரு பக்கம் இருக்க தான் நடத்தி வரும் புரோட்டா கடையில் (ரெஸ்டாரான்ட்தான்) கருணாஸ் அதிகம்இருப்பதில்லையாம். அதை கவனிக்க ஆள் வைத்து விட்டாராம். சாப்பிட வருகிற வாயெல்லாம் ஓசியிலேயேஅள்ளிப்போட்டுக் கொண்டு போனதால் பெரும் நஷ்டமாகி விட்டதாம். இதனால்தான் இப்போது கருணாஸ்கல்லாவில் உட்காருவதில்லையாம்.

அடுத்த இம்சை உஷார்!

Read more about: karunas to become hero

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil