அஜித் வசூல் சாதனையை முறியடித்த சூர்யா.. அமரன் ரெக்கார்டு தான் அடுத்த ஸ்டாப்.. கருப்பு மெகா வசூல்!

சென்னை: விஜய்க்கு போட்டியாக சினிமாவில் பல சாதனைகளை படைத்து வந்த அஜித் குமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும் அவரது அதிகபட்ச வசூலாக குட் பேட் அக்லி படம் தான் உள்ளது. 200 கோடிக்கும் அதிகமான வசூலை குட் பேட் அக்லி பெற்று சாதனை படைத்தது.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் 300 கோடி வசூல் செய்து ரஜினிகாந்த், விஜய்யை தொடர்ந்து 3வது இடத்தில் எஸ்கேவை அமர வைத்தது.

Karuppu beats Ajith Kumar s Good Bad Ugly and Suriya s Next Target is Sivakarthikeyan s Amaran

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரதீப் ரங்கநாதனை விட பின் தங்கியிருந்த சூர்யா மீண்டும் தான் யார் என்பதை தமிழ் சினிமாவுக்கு கருப்பு படம் மூலம் நிரூபித்துள்ளார். வார நாட்களிலும் தொடர்ந்து பல தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஷோக்களாக ஓடிய நிலையில், மீண்டும் இன்று வெள்ளி முதல் இந்த வாரம் ஞாயிறு வரை படம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

குட் பேட் அக்லி பீட் பண்ணியாச்சு: அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் கடைசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் 200 கோடி என்றே வெளியானது. அதனை 7 நாட்களில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் முறியடித்து 207 கோடி பாக்ஸ் ஆபிஸ் போஸ்டர் நேற்று வெளியானது. 8வது நாள் உடன் சேர்த்து இதுவரை கருப்பு திரைப்படம் 237 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

அமரன் வசூலுக்கு ஆப்பு: ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்தில் வசூலில் அமரன் படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அஜித், சூர்யாவை முந்தியிருந்த நிலையில், கருப்பு படத்தின் மூலம் ஆர்ஜே பாலாஜி சூர்யாவுக்கு மெகா வசூல் வேட்டையை பரிசளித்துள்ளார். தியேட்டர்களில் தொடர்ந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கருப்பசாமியை தரிசித்து வரும் நிலையில், இந்த வார முடிவுக்குள் அமரன் படத்தின் வசூல் சாதனையை கருப்பு முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

Karuppu beats Ajith Kumar s Good Bad Ugly and Suriya s Next Target is Sivakarthikeyan s Amaran

கருப்பு 2: ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து கண்டிப்பாக கருப்பு 2 படத்தை எடுக்க வேண்டும் என்றும் சூர்யாவுக்கு கருப்பசாமி கெட்டப் கச்சிதமாக பொருந்தி போயுள்ளது என்றும் இனிமேல் தொடர்ந்து சூர்யா பாக்ஸ் ஆபீஸில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்றும் கூறுகின்றனர். விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக சூர்யாவுக்கு பெரிய படங்கள் காத்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X