மோசமான கணவனாக இருந்தேன்.. என்னை மாற்றியதே அவ தான்.. உருக்கமாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி!

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருப்பு' திரைப்படம் மே 14ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி நான் மிகவும் மோசமான கணவனாக இருந்தேன் என்று பேசிய போது அவரின் மனைவி கதறி அழுதார்.

சூர்யாவின் 45வது படமான கருப்பு படத்தில், த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, மனைவிக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 20 வயதில் காதலித்து 21 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நான் துணையாக அருகில் இருந்ததில்லை. அவர்களை நான் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.

Karuppu R J Balaji suriya
Photo Credit:

ஆர்.ஜே.பாலாஜி: என்னை யாருமே நம்பவில்லை, என் வீட்டிலும் என் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் அந்த நேரத்தில் 100% என் மேல் நம்பிக்கை வைத்தது என் மனைவி தான். நான் மிகவும் மோசமான கணவனாக, சில நேரங்களில் மோசமான மனிதனாகவும் இருந்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாத்தையும் தாண்டி ஒரு நல்ல மனிதனாக மாற்றியது என் மனைவி தான். நான் இன்று மாறி இருப்பதற்கு காரணம் அவர் தான். அவர் பெயர் திவ்யா நாகராஜன். என் வாழ்க்கையில் வந்திருக்கு மிகவும் நன்றி இத்தனை வருடங்களாக என்னுடன் இருப்பதற்கு மிகவும் நன்றி. என்னுடைய அம்மா என்னுடைய குழந்தைகள் என் தங்கச்சி, தம்பிக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன் என உருக்கமாக பேசினார். ஆர்ஜே பாலாஜி பேசிக்கொண்டு இருக்கும் போதே மேடையில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த அவரது மனைவி கண் கலங்கினார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் கதை: ஆர்ஜே.பாலாஜி தனது காதல் கதை பற்றி ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
நான் 21 வயது இருக்கும் போதே வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இவர் திருமணம் செய்து கொள்ளும் போது, ஆர்ஜே வேலை வட இல்லையாம். ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதால் வீட்டிலேயே நல்ல நாள் பார்த்து மீண்டும் திருமணம் செய்து வைத்தார்கள். இதனால் எனக்கு இரண்டு முறை திருமணம் நடந்தது என அவர் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X