’கருப்பு’ பட ரிலீஸ் தள்ளிப்போகுதா?.. என்ன சொல்றீங்க?.. சூர்யாவுக்கு மதுரையில் மாஸ் வரவேற்பு!
மதுரை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. விமான நிலையத்துக்கு வந்த நடிகர் சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை இன்று வெளியான கருப்பு ஆடியோ லான்ச் போஸ்டரில் காணவில்லையே என்றும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

விஜய்யின் ஜன நாயகன் படம் மே மாதம் வெளியாகவுள்ள நிலையில், நேரடி கிளாஷை தவிர்க்கவே இப்படியொரு ஏற்பாடு என்று விஜய் ரசிகர்களும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனால், கருப்பு பட ரிலீஸ் தள்ளிப்போகவில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருப்பு பட ரிலீஸ் தள்ளிப்போகுதா?: கருப்பு ஆடியோ லான்ச் இன்று முதுரையில் நடைபெற உள்ளதாக ட்ரீம் வாரியர்ஸ் வெளியிட்ட புதிய போஸ்டரில் கருப்பு படம் மே மாத வெளியீடு என்று மட்டுமே உள்ளது. மே 14ம் தேதி ரிலீஸ் என்பது திடீரென காணாமல் போய்விட்டதே என்ன காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே பொங்கலுக்கு கருப்பு படம் வெளியாகாமல் போக காரணமே விஜய்யின் ஜன நாயகன் பொங்கல் ரிலீஸ் ஆகப் போகிறது என வெளியான அறிவிப்பு தான் என ஆர்ஜே பாலாஜி கூறிய நிலையில், ஜன நாயகன் மே மாதம் வெளியானால் கருப்பு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கருப்பு திட்டமிட்டப்படி வெளியாகும்: மத்திய சான்றிதழ் வாரியம் அறிவித்தபடி படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் கருப்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது என்றும் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் வரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு போஸ்டர்கள் இருக்கக் கூடாது என்பதால் தான் இப்படியொரு முடிவு என விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரையில் மாஸ் வரவேற்பு: நேற்று கோவையில் தனுஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்த வீடியோக்கள் வைரலான நிலையில், இன்று மதுரையில் கருப்பு ஆடியோ லான்ச்சுக்காக வந்த சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பை அளித்துள்ள வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. சாய் அபயங்கர் இசையில் கருப்பு ஆடியோ லான்ச் களைகட்ட காத்திருக்கிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்துள்ள த்ரிஷா, சுவாசிகா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications