கருப்பு இன்று ரிலீஸ்.. மௌனம் கலைத்த சூர்யா.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். நேற்றே இப்படம் ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. எப்படியோ அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு இன்று அப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் பட ரிலீஸ் குறித்து சூர்யா மௌனம் கலைத்து ட்வீட் செய்திருக்கிறார்.

சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கிடைக்கவில்லை. பிரமாண்ட பட்ஜெட்டில் கங்குவா படத்தில் நடித்தார். அது மோசமான தோல்வியை சந்தித்தது. அதனையடுத்து ரெட்ரோவில் நடித்தார். அதுவும் ஊற்றிக்கொண்டது. வரிசையாக தோல்வி படங்களை கொடுத்துவரும் சூர்யாவுக்கு கருப்பு படத்தில் பாலாஜி தரமான வெற்றியை கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. படமானது நேற்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக படம் ரிலீஸாகவில்லை.

Karuppu Releases Today Suriya Thanks Fans for Standing Strong
Photo Credit:

பாலாஜி எமோஷனல் வீடியோ: நேற்று படம் ரிலீஸாகாதது சூர்யாவின் ரசிகர்களுக்கு ரொம்பவே அப்செட்டை கொடுத்தது. அதிலும் ஆர்.ஜே.பாலாஜி எமோஷனலும் ஆகிவிட்டார். கண்கள் கலங்கியபடி அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "இதுவே கடைசியாக இருக்கும் என நம்புகிறேன். அனைத்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி நடந்திருக்கக்கூடாது. படம் பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து காலை ஒன்பது மணிக்கே தியேட்டருக்கு சென்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

Also Read
Karuppu Release: எல்லா பிரச்னைகளும் ஓவர்.. தயாரிப்பாளர் உருக்கம்.. கருப்பன் வரான் வழி மறிக்காதே
Karuppu Release: எல்லா பிரச்னைகளும் ஓவர்.. தயாரிப்பாளர் உருக்கம்.. கருப்பன் வரான் வழி மறிக்காதே

சூர்யாவின் கடுமையான உழைப்பு: நானும் இதை எதிர்பார்க்கவில்லை. இன்று மாலை ஆறு மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் முடிந்து படம் வெளியாகும் என நம்புகிறேன். மே 14ஆம் தேதி படம் ரிலீஸாகி ப்ளாக் பஸ்டர் ஆகும் என நிறைய நாட்கள் நினைத்திருக்கிரேன். அழுகை வருகிறது. அது வலி வேறு டிப்பார்ட்மென்ட். சூயாவும் கடுமையாக உழைத்து கொடுத்திருக்கிறார். தாமதத்துக்கு மன்னியுங்கள். இந்த கஷ்டங்களை தீர்க்கும்படி கருப்பு படம் இருக்கும். கருப்பு வரான் வழி விடு என சொல்வேன். இப்போது பலர் வழியை மறைக்கிறார்கள்" என கண்கள் கலங்கியபடி தெரிவித்திருந்தார்.

இன்று ரிலீஸ்: அந்த வீடியோவை பார்த்து பலரும் பாலாஜிக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். சூழல் இப்படி இருக்க கருப்பு படத்துக்கு எழுந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டதால் இன்று ரிலீஸாகும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருக்கிறார். இந்நிலையில் கருப்பு படம் இன்று ரிலீஸாவது பற்றி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம். எங்களோடு நின்ற அனைவருக்கும் நன்றி. கருப்பு இன்று ரிலீஸாகிறது" என தெரிவித்துள்ளார். முன்னதாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டா பக்கத்தில், "கருப்பு படத்துக்காக காத்திருந்த ஒவ்வொரிடமும், படம் பற்றி கேட்ட ஒவ்வொருவரிடமும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த காத்திருப்பு: இந்த காத்திருப்பு உங்களுக்கு எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இப்படத்தை நீங்கள் எவ்வளவு அன்புடனும், எதிர்பார்ப்புடனும் தாங்குகிறீர்கள் என்பதையும் உணர்கிறோம். ஒவ்வொரு தாமதமும் எங்களையும் பாதித்தது. ஆனால் ஒவ்வொரு தடையையும் கடப்பதற்கு உங்கள் ஆதரவுதான் உதவியது. உங்கள் மெசேஜ்கள், நம்பிக்கை, அளவற்ற அன்புதான் இந்தக் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. கருப்பு இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X