karuppu Success.. ஆர்.ஜே.பாலாஜிக்கு பரிசளித்த காரை ஓட்டிய சூர்யா.. ரெண்டு பேரும் செம ஃபன்

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. கடந்த மாதத்தில் வெளியான இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலிலும் 340 கோடி ரூபாயை தாண்டி சென்றுவிட்டது. இதனால் சூர்யா உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். படத்தின் கேமரா மேன், இசையமைப்பாளருக்கு கார் பரிசாக அளித்த அவர், ஆர்.ஜே.பாலாஜிக்கும் காரை பரிசாக கொடுத்தார்.

சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே கரியர் சரியில்லாமல்தான் போனது. கடந்த 6 வருடங்களில் அவருக்கு மொத்தமே இரண்டு படங்கள்தான் மெகா ஹிட்டாகியிருக்கின்றன. அந்த இரண்டு படங்களுமே தியேட்டர்களில் ரிலீஸாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தியேட்டரிக்கல் ஹிட்டடிக்கும் என்று நம்பி அவர் நடித்த எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ படங்கள் எல்லாம் சொதப்பி காலை வாரிவிட்டன. இதனால் எப்படியாவது ஒரு மெகா ஹிட்டை கொடுத்திட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.

karuppu Success Suriya Takes RJ Balaji for a Fun Ride in the Car He Gifted Him
Photo Credit:

கருப்பு படத்தில் சூர்யா: அப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க; மலையாள நடிகர் இந்திரன்ஸ் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கிறார். முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவர் விலகிவிட; சென்சேஷனலாக இருக்கும் சாய் அபயங்கர் இசையமைத்தார். மே மாதம் படமானது சில சிக்கல்களை தாண்டி ரிலீஸானது.

Also Read
திரிஷா அம்மாவும் விஜய் மனைவி சங்கீதாவும் ஒரே நிகழ்ச்சியில்.. அப்போது என்ன நடந்தது தெரியுமா?
திரிஷா அம்மாவும் விஜய் மனைவி சங்கீதாவும் ஒரே நிகழ்ச்சியில்.. அப்போது என்ன நடந்தது தெரியுமா?

மெகா ஹிட் கருப்பு: இந்தப் படம் சூர்யாவுக்கும், சூர்யாவின் ரசிகர்களுக்கும் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.கமர்ஷியல் விஷயங்கள், குடும்பத்துக்கு தேவையான விஷயங்கள் என சரியானவைகளை சரியான விதத்தில் கலந்து இந்தப் படத்தை பாலாஜி செய்திருந்தார். அதனால் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்கள்தான். உலகம் முழுவதும் 340 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமும் அறிவித்தது.

கருப்பு OTT ரிலீஸ்: இன்று அந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகிவிட்டது. திரையரங்குகளில் அந்தப் படத்துக்கு எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கிடைத்ததோ அதே அளவுக்கான ரெஸ்பான்ஸ் ஓடிடி ரிலீஸிலும் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக படக்குழு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓடிடியில் அதிக நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற பெயரையும் கருப்பு பெறுமா என்ற ஆவலும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

கார் பரிசளித்த சூர்யா: இந்நிலையில் தனக்கு இப்படி ஒரு பிரமாண்டமான வெற்றியை கொடுத்த ஆர்.ஜே.பாலாஜிக்கு தனது அன்பின் வெளிப்பாடாக; ஒரு சொகுசு காரை பரிசாக கொடுத்திருக்கிறார் சூர்யா. மேலும் அந்தக் காரில் பாலாஜியை முன் இருக்கையில் அமர வைத்து சென்னை சாலைகளில் குட்டி ரவுண்டும் வந்தார். சூர்யா சூப்பராக கார் ஓட்டுவதை பார்த்த ஆர்.ஜே, 'பயங்கரமாக கார் ஓட்டுறீங்களே சார்' என சொல்ல; சூர்யாவோ வெட்கப்பட்டு, 'அட நீ வேற சும்மா இருப்பா' என கூறினார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

மற்ற சிலருக்கும் பரிசு: முன்னதாக ஆர்.ஜே. பாலாஜிக்கு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், கருப்பு கேமரா மேன் ஜி.கே.விஷ்ணு ஆகியோருக்கும் சொகுசு காரை சூர்யா பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே கருப்பு கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X