»   »  300 பேரை கொன்று குவித்து கொக்கரிக்கும் மொட்டை கார்த்தி: காஷ்மோரா பர்ஸ்ட் லுக்

300 பேரை கொன்று குவித்து கொக்கரிக்கும் மொட்டை கார்த்தி: காஷ்மோரா பர்ஸ்ட் லுக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காஷ்மோரா. கார்த்தி இந்த படத்திற்கு என மெனக்கெட்டு கெட்டப்பை மாற்றியுள்ளார். படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.


 Kashmora first look poster released

இந்நிலையில் காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கார்த்தி மொட்டைத் தலையும், கத்தை தாடியுமாக பார்க்கவே வித்தியாசமாக உள்ளார். பர்ஸ்ட் லுக்கே பெஸ்ட் லுக்காக உள்ளது.


படத்தில் கார்த்தி வில்லத்தனமும் செய்வதாக கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கார்த்தி மிரட்டலாக உள்ளார் என்றே கூற வேண்டும்.


இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறுகையில்,


படத்தில் கார்த்தி 3 வித்தியாசமான கெட்டப்புகளில் வருவார். 47 கெட்டப்புகளை செய்து பார்த்து அதில் 3 கெட்டப்புகளை தேர்வு செய்தோம். இந்த போஸ்டர் காட்சியில் மட்டும் 300 ஜூனியர் ஆர்டிஸ்டுகள் நடித்துள்ளனர் என்றார்.


காஷ்மோரா படத்தில் நாம் இதுவரை பார்த்திராத கார்த்தியை பார்க்கலாம் போன்று. பார்க்க கட்டப்பா கெட்டப்பில் அசத்தலாக இருக்கிறார் கார்த்தி


English summary
Karthi's much awaited first look poster of his upcoming movie Kashmora has been released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil