ஹீரோ .. ஹீரோ ..

By Staff

புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது குறித்து தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூராஜாவிடம்கேட்டபோது,

ராகவா படத்தில் நல்ல டெக்னீஷியன்கள் இல்லை. நல்ல கதையையும் அவர்கள் சொல்லவில்லை. அதனால்தான்பூஜையே வேண்டாம், இப் படத்தில் தனுஷ் நடிக்க மாட்டார் என்று முதலிலேயே நான் கூறினேன். மேலும் 10படங்களில் தனுஷ் புக் ஆகியிருக்கிறார். இதனால் உங்கள் படத்தில் இன்னும் 2 வருடத்துக்கு நடிக்க வாய்ப்பேஇல்லை என்றேன்.

ஆனால், தனுஷை வைத்து படம் எடுப்பது எங்கள் லட்சியம், நீங்க எப்போ டேட்ஸ் கொடுத்தாலும் சரி, நல்லகதையுடன் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி வற்புறுத்தியதால்தான் அட்வான்ஸ்வாங்க ஒப்புக் கொண்டேன்.

ஆனால் இன்று வரை ஒரு நல்ல கதையை கூற அவர்களால் முடியவில்லை. திரும்பத் திரும்ப காதல் கொண்டேன்டைப் கதையைத்தான் மாற்றி மாற்றிக் கூறிக் கொண்டிருந்தார் சிபிச்சக்கரவர்த்தி.

எங்களிடம் கேட்காமலேயேதிடீரென படத்தின் பூஜைக்கு டேட் பிக்ஸ் செய்து அழைப்பிதழையும் அடித்துக் கொண்டு வந்தார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் சார்பில் விரிவான விளக்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X