சிவகார்த்திகேயன்.. இப்போ கவின்.. குறுகிய காலத்தில் பரவலாக ரசிகர்கள் அன்பை பெற்றது எப்படி?

சென்னை: நடிச்சது என்னமோ ஒன்னு, இரண்டு படம் தான் என்றாலும், ஒரு உச்ச நட்சத்திரத்திற்கு கிடைக்கும் அன்பும், வரவேற்பும் நடிகர் கவினுக்கு கிடைக்க காரணம் என்ன… கவின் போகிற இடம் எல்லாம் ரசிகர்கள், அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாட என்ன காரணம், என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

1990ம் ஜூன் 22ந் தேதி பிறந்தவர் நடிகர் கவின். லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த இவர், விஜய் டிவியில் ஆடிஷன்களில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து '’கானா காணும் காலங்கள்’’ என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து 'தாயுமானவன்’ 'சரவணன் மீனாட்சி’ போன்ற தொடர்களில் நடித்தார். இதில் ​​அவரது வேட்டையன் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதித்துவிட்டதால், அனைவருக்கும் பேவரைட் ஹீரோவாக மாறினார் கவின்.

Kavin is happy with the success of Star movie and the love of his fans

நடிகர் கவின்: சின்னத்திரையில் கிடைத்த பெயரை வைத்து வெள்ளித்திரைக்கு சென்ற கவின், '’சத்ரியன்’’ படத்தில் துணை வேடத்தில் நடித்தார், அதன் பிறகு '’நட்புனா என்னனு தெரியுமா’’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால், கவினுக்கு சின்னத்திரையில் கிடைத்த வரவேற்ப்பு வெள்ளித்திரையில் கிடைக்காததால், மீண்டும் விஜய் டிவிக்கு வந்த கவின், '’பிக் பாஸ்’’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

வெற்றி கொடுத்த லிப்ட்: அதன் பிறகு அவசரம் காட்டாமல் நல்லகதைக்காக காத்திருந்து கதையை தேர்வு செய்து '’லிப்ட்’’ படத்தில் நடித்தார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவான இந்த படம், தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியான போதும் இந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. 'லிப்ட்’ படத்தை தொடர்ந்து '’டாடா’’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. கல்லூரி மாணவனாக, காதலனாக, அப்பா என மூன்று விதமான கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் பெற்றோருக்கு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்து இருந்ததால், தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்தனர்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை: தற்போது, கவினின் நடிப்பில் '’ஸ்டார்’’ திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. சினிமாவில் ஹீரோவாக துடிக்கும் ஒரு நடிகரின் வலியை அப்பட்டமாக காட்டி தனது நடிப்பில் வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார் கவின். 'ஸ்டார்’ படம் திரையிடப்பட்ட தியேட்டரில் படம் பார்க்க சென்ற கவினை சுற்றி வளைந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து வருகின்றனர். ஒரு வளர்ந்த பெரிய நடிகருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் இரண்டு வெற்றிப்படத்தை கொடுத்த கவினுக்கு கிடைப்பதற்கு முக்கிய காரணம், அவர் சிவகார்த்திகேயன் போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போராடி வந்தது தான்.

சிவகார்த்திகேயன் போல: கவினுக்கு வாழ்க்கை கொடுத்த இதே விஜய் டிவி தான், சிவகார்த்திகேயனையும் உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டு அழகுப் பார்த்தது. '’கலக்கப்போவது யாரு’’ நிகழ்ச்சியில் ஸ்டேன்டப் காமெடியனாக வந்த சிவகார்த்திகேயன், ஏற்ற இறக்கத்துடன் பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின் அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது திறமையை படிப்படியாக வளர்ந்துக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து மாஸ் காட்டி வருகிறார்.

அலட்டிக்கொள்ளாத நடிப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் போல, ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் கவின் என்பதால், ரசிகர்களுக்கு இவர் மீது ஒரு கரிசனம் உள்ளது. அந்த கரிசனம் தான் தற்போது, கவின் மீது ரசிகர்கள் அன்பு மழை பொழிய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல், இவரின் எதார்த்தமான நடிப்பு, அலட்டிக்கொள்ளாத எளிமையான குணம் ரசிகர்களுக்கு பிடித்துவிட ரசிகர்கள் இணையத்தில் இவரை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X