Mask: மாஸ் காட்டுமா மாஸ்க்?.. ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பாரா கவின்.. ஆண்ட்ரியாவுக்கு கம்பேக்!
சென்னை: வெற்றிமாறன் மேற்பார்வையில், விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்க்' (Mask) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் அழகான மற்றும் திறமையான இளம் நாயகனாக வலம் வரும் கவின் பிக் பாஸ் சீசன் 3க்குப் பிறகு கோலிவுட்டில் லிப்ட், டாடா என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.
ஸ்டார் படத்தில் தனது நடிப்புத் திறமையை ஒட்டுமொத்தமாக வெளியே கொண்டு வந்து ரசிகர்களை கவர்ந்த கவின் நெல்சன் தயாரிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் மிகப்பெரிய சரிவை சந்தித்தார்.

இந்த ஆண்டு நடன இயக்குநர் சதிஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான கிஸ் திரைப்படம் ஃபேண்டஸி படமாக உருவான நிலையில், மகதீரா போல மாஸ் காட்டும் என எதிர்பார்த்த நிலையில், அந்த படமும் மண்ணைக் கவ்வி விட்டது.
ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பாரா கவின்: சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நட்சத்திரங்கள் ஒரு முறை ஃப்ளாப் படம் கொடுத்தால், அடுத்த முறை ஹிட் படத்தை எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்கிற முனைப்பில் பல ஆண்டுகளாக தங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், தொடர்ந்து தோல்வியை தழுவினால், சினிமா அந்த நடிகரை கண்டுக்கொள்ளாது. இந்நிலையில், ப்ளடி பெக்கர், கிஸ் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தோல்விக்குப் பிறகு மாஸ்க் படத்தை பெரிதும் நம்பி காத்துக் கொண்டிருக்கிறார் கவின். கண்டிப்பாக இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் மேற்பார்வையில் படம் உருவாகியுள்ள நிலையில், டிரைலரும் பிளாக்பஸ்டர் படத்துக்கான டிரைலராகவே கட் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாஸ் காட்டுமா மாஸ்க்?: கவின் ஹீரோவாகவும் ஆண்ட்ரியா வில்லியாகவும் நடித்துள்ள மாஸ்க் திரைப்படத்தில் மிடில் கிளாஸ் மக்களுக்கு கோபம் வந்தால் பணக்கார வில்லன்களை என்ன செய்வார்கள் என்பது தான் கதையாக உள்ளது. கண்டிப்பாக ரசிகர்களை படம் கவர்ந்துவிட்டால் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 50 கோடி வசூல் அளவுக்கு வந்தால் தான் கவினுக்கு பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக இந்த மாஸ்க் அமையும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











