அய்யய்யோ என்னது அடுத்த சிவகார்த்திகேயனா?.. பதறிப்போய் கவின் சொன்ன பதில்
சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார் கவின். படமானது மே 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கவினின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. அதன் காரணமாக ரசிகர்கள் கவினுக்கு தங்களது பாராட்டை பலமாகவே கொடுத்துவருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.
ஸ்டார்: இந்த சூழலில் கவின் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இதில் கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒரு நடுத்தர இளைஞன் பெரிய ஹீரோவாக மாறுவது பற்றி படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. முக்கியமாக கவினின் நடிப்பு அட்டகாசமாக இருப்பதாகவும் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள்.
உதயநிதியின் பாராட்டு: அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டார் படத்தை பார்த்து தனது பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக படக்குழுவும் உற்சாகத்தில் இருக்கிறது. அதே உற்சாகத்தோடு தீவிரமான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் ஸ்டார் படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது கவினிடம் நீங்கள்தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்று சொல்கிறார்களே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
கவினின் பதில்: அதற்கு பதிலளித்த கவின், "சிவகார்த்திகேயன் அண்ணாவும், விஜய் சேதுபதி அண்ணாவும் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்கள். எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து இன்று உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வளர்ச்சி என்னைப் போல் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடியது. நிலைமை இப்படி இருக்க நான் அடுத்த சிவகார்த்திகேயன் என்றெல்லாம் சொல்வதில் அவசியமில்லை" என்றார். அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











