எங்கள் படத்தையும் கொஞ்சம் ப்ரோமோட் செய்யுங்க சார்.. கவினிடம் கெஞ்சிய பிரபல நடிகர்.. இது நல்லாருக்கே

சென்னை: கவின் நடிப்பில் கடைசியாக வெளியான கிஸ் திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக வரும் 21ஆம் தேதி மாஸ்க் திரைப்படம் ரிலீஸாகிறது. விகர்ணன் என்பவர் படத்தை இயக்க ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் மாஸ்க் பட ப்ரோமோஷனுக்கு வந்த கவினிடம் தனது படத்தையும் ப்ரோமோட் செய்ய பிரபல நடிகர் சொன்னது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கோலிவுட்டின் ரைசிங் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார் கவின். இதுவரை அவர் நடித்திருக்கும் படங்களில் டாடா உள்ளிட்ட சில படங்கள்தான் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. கடைசியாக வெளியான கிஸ் திரைப்படம்கூட சுமாரான வரவேற்பைதான் பெற்றிருந்தது. காதல், ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருந்த படம் தியேட்டர்களைவிடவும் ஓடிடியில் வெளியான பிறகு ரசிகர்களிடையே ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.

கவினின் மாஸ்க்: இப்போது அவர் மாஸ்க் படத்தில் நடித்திருக்கிறார். வெற்றிமாறனும், ஆண்ட்ரியாவும் இணைந்து தயாரித்திருக்கும் அப்படத்தில் கவினுடன் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளார். விகர்ணன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். வெற்றிமாறன் ஒரு படத்தில் சம்பந்தப்பட்டிருந்தாலே அப்படம் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துவிடும். இதற்கு முன்பு வெளியான பேட் கேர்ள் படமும் அவரால்தான் தயாரிக்கப்பட்டிருந்தது.

Kavin Promotes Mask Ahead of Release Actor Muneeskanth Requests Promotion for Middle Class Film
Photo Credit:

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குரியதாக இருந்தது. மேலும் படத்தில் ஆண்ட்ரியாவுக்கும், கவினுக்கும் இடையே நடக்கும் மோதலும், மிடில் கிளாஸ் வாழ்க்கை பற்றியுமான விஷயங்களும்தான் மையக்கரு என்பது உறுதியானது. நிச்சயம் இப்படம் டாடாவுக்கு பிறகு கவினுக்கும், வடசென்னை மாதிரியே ஆண்ட்ரியாவுக்கும் முக்கியமான நினைவுகளை கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

எங்கள் படத்தையும் ப்ரோமோட் செய்யுங்க: படம் நவம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ரிலீஸுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் திருப்பூரில் இருக்கும் சக்தி சினிமாஸுக்கு ஹீரோ கவின் சென்றார். பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது நடிகர் முனீஸ்காந்த் இடையில் வந்து, 'பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்' என்பது மாதிரி உங்கள் படத்தோடு எங்கள் படத்தையும் ப்ரோமோட் செய்யுங்களேன் என கூறினார்.

கவினின் ரிப்ளை: உடனே கவினோ சிரித்துக்கொண்டே, 'நவம்பர் 21ஆம் தேதி மாஸ்க், மிடில் கிளாஸ் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகின்றன. இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தப் படத்தின் டைட்டில்தான் எங்கள் படத்தின் கதை. மாஸ் படத்தில் எல்லோருமே கெட்டவர்கள்தான். மற்ற படங்களில் நான் ஏற்ற கேரக்டர்களைவிட இதில் ஏற்றிருக்கும் கேரக்டர் வித்தியாசமானது" என்றார். முன்னதாக மிடில் கிளாஸ் படத்தை கிஷோர் ராமலிங்கம் என்பவர் இயக்க முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களை ஏற்றிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X