காலேஜ் கட் அடிச்சிட்டு ‘மாஸ்க்’ படம் பார்க்க வராதீங்க.. அஜித் மாதிரியே அட்வைஸ் பண்ண கவின்!
சென்னை: வெற்றிமாறன் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் மாஸ்க் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதில் கவின், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லரும் நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றிருக்கின்றன. ரிலீஸ் நெருங்கிவிட்டதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவரும் கவின் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
சின்னத்திரை நாடகங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகியவைகளில் பயணப்பட்டு தற்போது கோலிவுட்டின் ரைஸிங் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார் கவின். கடைசியாக அவர் நடித்திருந்த கிஸ் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது. கவினின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. சூழல் இப்படி இருக்க இப்போது அவர் விகர்ணன் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
வெற்றிமாறன், ஆண்ட்ரியா தயாரிப்பு: இப்படத்தில் ஆண்ட்ரியாவும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மேலும் இதனை அவர் இயக்குநர் வெற்றிமாறனுடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்திருக்கிறார். தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் ஆண்ட்ரியா ரொம்பவே பயமாக இருக்கிறது என்றும் ஒரு பேட்டியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக தனக்கு மோசமான அனுபவத்தை இப்படம் கொடுக்காது என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்.

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில்தான் வெளியானது. மிடில் கிளாஸ் வாழ்க்கை, அத்துமீறும் அதிகாரத்துக்கு எதிரான விஷயங்களை இந்தப் படத்தில் இயக்குநர் பேசியிருப்பது ட்ரெய்லரை பார்க்கையில் புரிகிறது. முக்கியமாக இப்படம் குரலற்றவர்களின் குரலாக இருக்கும் என்று வெற்றியும் கூறியிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனின் பங்கும் இதில் இருப்பதால் படத்துக்கு ஓவர் ஹைப் எகிறியிருக்கிறது. இதில் ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
நாளை ரிலீஸ்: படமானது நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கான வேலைகள் எல்லாம் ஜோராக தொடங்கிவிட்டது. டிக்கென் முன்பதிவிலும் இதுவரை நல்லதொரு ஓபனிங் கிடைத்துவருவதாகவே தெரிகிறது. கண்டிப்பாக டாடா படம் போல் இதுவும் கவினின் கரியரில் பெரிய திருப்புமுனையை உருவாக்கும் என்றும் அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். நாளை ரிலீஸ் என்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடித்திருக்கின்றன.
கவினின் பேச்சு: அந்தவகையில் கல்லூரி ஒன்றில் நடந்த ப்ரோமோஷனில் மாணவர்கள், மாணவிகள் மத்தியில் பேசிய கவின், "மாஸ்க் திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. அன்றைய தினம் எல்லோருக்கும் கல்லூரி இருக்கும். நீங்கள் எல்லாம் சமத்தாக அன்றைய தினம் கல்லூரிக்கு வந்து உங்கள் கடமையை முடிக்க வேண்டும். பிறகு சனியோ, ஞாயிறோ தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள். அதுவே போதும். ஒன்றும் பிரச்னையில்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு. தேவையானபோது வாருங்கள். முடிந்ததும் வெளியே போய்விடுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











