Ravi Mohan X Keneeshaa : யார் என்ன நினைச்சாலும்.. காலம் முழுக்க உன்னோடு இப்படியே.. கெனிஷா எமோஷ்னல் போஸ்ட்
சென்னை: பாடகியும் நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியுமான கெனிஷா, கடந்த 7ஆம் தேதி தனது 27 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட கெனிஷா அதில் ரவி மோகன் தனக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரவி மோகன் குறித்து நீண்ட பதிவு ஒன்றை மிகவும் எமோஷனலாக எழுதி கேப்ஷனிட்டுள்ளார்.
அதாவது, " என்னென்றைக்கும் அன்பு இருக்கும். சின்ன வயசுல இருந்தே பல நேரங்கள்ல நான் ஒரு ஆளாவே மதிக்கப்படல, என்னை எல்லாரும் ஒதுக்கி வெச்ச மாதிரியே ஒரு உணர்வு. நான் எதையோ பெருசா எதிர்பார்க்கிறேன்னு எல்லாரும் தப்பா நினைச்சாங்க, ஆனா நான் எதிர்பார்த்தது எல்லாம் ஒரு சின்ன அன்புக்காகவும் மதிப்புக்காகவும் மட்டும்தான். என்னைக்கு எனக்காக நான் வாழ ஆரம்பிச்சேனோ, அன்னைக்கு இந்த உலகமே எனக்குப் மரியாதை கொடுத்து, ஏகப்பட்ட சந்தோஷங்களை அள்ளிக் கொடுத்துச்சு.

யார் என்ன நினைச்சாலும்: அப்புறம் ரவி மோகன்... நீ வந்த அப்புறம் என் உலகமே மாறிடுச்சு. என்னோட எண்ணங்கள், செயல்கள், காதல் பத்தின என்னோட பார்வைனு எல்லாமே புதுசா இருந்துச்சு. மத்தவங்க இதை எப்படி வேணா நினைக்கலாம், ஆனா நம்மளைப் பத்தித் தெரிஞ்சவங்களுக்கு நாம எவ்வளவு உண்மையா, நிம்மதியா இருக்கோம்னு புரியும். என்னோட கஷ்டமான நேரங்கள்ல எனக்குத் துணையா நின்னு, என்னோட ஒவ்வொரு சின்ன வெற்றியைக் கூட உன்னோட வெற்றியா நீ கொண்டாடுன. அதுக்காக உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.
எதிர்காலம்: என்னோட இந்த பிறந்தநாளை இவ்வளவு அழகா, சுத்தமான அன்பால மட்டும் நிறைச்சதுக்கு ரொம்ப நன்றி. நீயே ரொம்ப டயர்டா இருக்குறப்ப கூட, மத்தவங்களை விட அதிகமா எனக்காக ஓடி ஓடி செய்ற... உன்னைப் பார்த்தாலே எனக்கு ஆச்சரியமா இருக்கும். கடந்து போனது எத்தனையோ கசப்பான விஷயங்களா இருக்கலாம், ஆனா அது முடிஞ்சு போச்சுன்னு ஒவ்வொரு பிறந்தநாளும் நமக்குச் சொல்லுது. இனி வரப்போற காலம் நமக்கானது. அதை நினைச்சு எனக்குப் பயமில்லை. அந்த எதிர்காலத்துல உன்கூட சேர்ந்து ரொம்ப சந்தோஷமா, ஜாலியா ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டே இருப்பேன்" என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலரோ ரவி மோகன் கெனிஷாவுக்கு பூங்கொத்து கொடுத்ததை பார்த்து புரோபோஸ் செய்கிறார் போல என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள்.



Click it and Unblock the Notifications











