twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளாவில் லாபம் பார்த்த சிவாஜி

    By Staff
    |

    எல்லா இடத்திலும் வசூல் சாதனை படைத்து வரும் சிவாஜி, கேரளாவிலும் வசூலில் பின்னி எடுத்து வருகிறதாம்.

    2வது வாரமாக கேரளாவில் சிவாஜி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இரு வாரங்களிலும் சிவாஜியின் வசூல் ரூ. 4 கோடியாம். கேரள விநியோகஸ்தரான ஜானி சாகரிகா சிவாஜியை ரூ. 3.2 கோடி கொடுத்து வாங்கினார். அந்தத் தொகையை இரண்டே வாரங்களில் திருப்பி எடுத்து லாபமும் பார்த்து விட்டார்.

    ஆரம்பத்தில் 86 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டிருந்தது. இது கேரள திரையுலகில் புதிய சாதனை. மலையாளப் படம் கூட இந்த அளவுக்கு அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லையாம். ஆனால் தற்போது 60 தியேட்டர்களாக சிவாஜி குறைந்து விட்டதாம்.

    திருவனந்தபுரத்தில் இன்னும் படு கூட்டமாக இருக்கிறதாம். இங்கு மட்டும் ரூ.20லட்சம் லாபத்தைப் பார்த்துள்ளதாம் சிவாஜி. கேரளாவில் ரஜினி படத்தை குடும்பம் குடும்பமாக பார்க்க வருகிறார்களாம் ரசிகர்கள்.

    கொச்சியில், இந்தப் படம் 100 சதவீத லாபத்தை விநியோகஸ்தர் ஜானி சாகரிகாவுக்கு கொடுத்துள்ளதாம்.

    மலையாள திரையுலகின் டாப் 5 படங்களில் சிவாஜிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. படம் வெளியான நாள் முதலே முதலிடத்தில்தான் இருக்கிறதாம் சிவாஜி.

    முன்பு தளபதிக்கு இந்தப் பெருமை கிடைத்தது. ஆனால் அதில் மம்முட்டி நடித்திருந்தார் என்பதால் மலையாளப் பாசத்தில் அப்படத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்திற்கு முதலிடம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

    கூல், கூல் ...!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X