Actor Vijay: 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா செல்லும் விஜய்.. வரவேற்க தயாராகும் கேரள ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய்யின் The greatest of all time படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடைந்து செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
விஜய்யின் அரசியல் பிரவேச அறிவிப்பை தொடர்ந்து இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்துட,ன் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து The greatest of all time படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் தற்போது கேரளாவில் துவங்கியுள்ளது. விஜய் அடுத்த வாரத்தில் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் கேரளா சென்றுள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய், இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக கேரளா செல்லவுள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தலையொட்டி தன்னுடைய கட்சியை பலப்படுத்தவுள்ளதாகவும் முன்னதாக கூறியிருந்த விஜய், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சினிமாவில் இருந்தும் தான் விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்துவரும் The greatest of all time படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்திலும் நடித்துமுடித்துவிட்டு அவர் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கூறியுள்ளார்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் படக்குழுவினர் மாஸ்கோ செல்லவுள்ளனர். அங்கு இரு வாரங்களுக்கு படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பாடல் காட்சி உள்ளிட்டவற்றை இயக்கி முடித்துள்ள வெங்கட்பிரபு அடுத்ததாக கேரளாவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை திட்டமிட்டுள்ளார். இதையொட்டி படக்குழுவினர் கேரளா சென்றுள்ளனர். இதன் சூட்டிங்கில் அடுத்த வாரத்தில் விஜய் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேரள ரசிகர்கள் உற்சாகம்: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். த்ரிஷாவும் ஒரு பாட்டிற்கு ஆட்டம் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யை வரவேற்க கேரள ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப் கிரிக்கெட் மைதானத்தில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ள நிலையில், அங்கு விஜய்யின் அடுத்தடுத்த போஸ்டர்களை வைத்து தங்களது உற்சாகத்தை கேரள ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா செல்லும் விஜய்: மேலும் சாலைகளிலும் விஜய் போலவே பைக் ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றனர். 14 ஆண்டுகளை கடந்து இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக கேரளா செல்கிறார் விஜய். முன்னதாக காவலன் படத்திற்காக அவர் கேரளாவிற்கு சூட்டிங்கிற்காக சென்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதிகளில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங்கும் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது படத்தின் ரிலீசின்போது மற்ற படங்களின் ரிலீசை தள்ளி வைக்கும்வகையில் கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











