விஜய்க்கு நன்றி சொன்ன கேரள அரசியல்வாதி: வைரல் வீடியோ
கேரள அரசியல்வாதி விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்
Recommended Video

சென்னை: கேரள அரசியல்வாதி ஒருவர் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் கேரளாவுக்கு செய்த உதவிகள் தெரிந்ததே. சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், பணத்தை ஒவ்வொரு பகுதி ரசிகர் மன்றங்களுக்கும் பிரித்து கொடுத்தார்.

மேலும், தமிழ்நாடு கர்நாடக விஜய் ரசிகர்களும் தன்னார்வளர்களாக முன்வந்து கேரள மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள அரசியல்வாதி ஒருவர் விஜய்யை பாராட்டி நன்றி சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அதிலொரு போட்டோ உண்டு... தென் இந்திய ஸ்டாரானு விஜய்.. என அரசியல்வாதி ஒருவர் ஒரு பந்தலில் ஒட்டப்பட்டிருக்கும் விஜய் போட்டோவை மக்களிடம் காண்பித்து, நாமெல்லாம் இவருக்கு நன்றி சொல்ல வேண்டும். கேரளாவுக்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளார் எனக் கூறுகிறார்.
அதில், லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு விஜய் இருக்கும் சர்கார் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது.


Click it and Unblock the Notifications











