twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முடி'யாத பஞ்சாயத்து... ஒரு கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்... இளம் ஹீரோவுக்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு

    By
    |

    கொச்சி: ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று இளம் ஹீரோவுக்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

    மலையாள சினிமாவின் இளம் ஹீரோ ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

    வெயில் படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி,
    ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தலைமுடியை மாற்றி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

    'வானம் கொட்டட்டும்' கதை பிடித்து இருந்தது..எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி !'வானம் கொட்டட்டும்' கதை பிடித்து இருந்தது..எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி !

    தயாரிப்பாளர் அதிர்ச்சி

    தயாரிப்பாளர் அதிர்ச்சி

    இதனால் வெயில் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.
    இந்நிலையில், திடீரென புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம்.

    ரூ.7 கோடி

    ரூ.7 கோடி

    கடுப்பான தயாரிப்பாளர் ஜார்ஜ் மீண்டும் புகார் செய்தார். விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடை விதித்தனர். அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப் படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7 கோடியை ஷேன் நிகம் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

    மன நோயாளிகள்

    மன நோயாளிகள்

    இதற்கிடையே தயாரிப்பாளர்களை மன நோயாளிகள் என்பது போல ஷேன் நிகம் தரக்குறைவாகப் பேசியதாக புகார் எழுந்தது. கோபமடைந்த கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இனி பேச்சுவார்த்தையை தொடரப்போவதில்லை, ஷேனுக்கானத் தடை தொடரும் என்று அறிவித்தனர்.

    மன்னிப்பு கேட்டார்

    மன்னிப்பு கேட்டார்

    இதற்கிடையில், தான் தவறு ஏதும் செய்திருந்தால் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஷேன். பின்னர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, மலையாள நடிகர் சங்கமான அம்மா, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

    அம்மா செயற்குழு

    அம்மா செயற்குழு

    இந்தப் பிரச்னை குறித்து மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் செயற்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தன்னால் தடைபட்டுள்ள படங்களை முடித்துக்கொடுக்கத் தயாராக இருப்பதாக ஷேன் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நடிகர் சங்கம், ஷேனுக்கான தடையை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியது.

    ரூ.1 கோடி நஷ்டஈடு

    ரூ.1 கோடி நஷ்டஈடு

    இந்நிலையில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர். இதில், ஷேன் நிகம் பிரச்னை காரணமாக தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர் என்றும் அதற்கு நஷ்டஈடாக அவர் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சீனு ராமசாமி

    சீனு ராமசாமி

    ஷேன், தமிழில் சீனு ராமசாமி இயக்கும் ஸ்பா படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இலங்கை தமிழராக நடிப்பார் என்று கூறப்பட்டது. இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். இதில் நடிக்க ஷேன் அக்கறை காட்டவில்லை என்பதால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Malayalam Film Producers Associations talks with the AMMA over the Shane Nigam issue yesterday. Producers Association demanded Rs 1 crore compensation from the actor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X