யஷ் எப்படி சரளமா தமிழ் பேச கத்துக்கிட்டாரு தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்டை பாருங்க!
சென்னை : நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகியுள்ள படம் கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படம் மூலம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார் அவர். சர்வதேச அளவிலான ஹீரோவாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

நடிகர் யஷ்
நடிகர் யஷ் கேஜிஎப் மற்றும் கேஜிஎப் சாப்டர் 2 ஆகிய படங்கள் மூலம் தன்னை சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் கொண்டுள்ளார். குறிப்பாக கேஜிஎப் 2 படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு மூலம் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். கேங்ஸ்டர் படமாக வெளியாகியுள்ள கேஜிஎப் படம் சர்வதேச அளவில் 700 கோடி வசூலை தாண்டியுள்ளது.

சிறப்பான வசூல்
படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள நிலையில், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் இந்தப் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியில் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக உள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு படம் உள்ளாகியுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த யஷ்
படத்தை காட்டிலும் படத்தின் நாயகன் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவரது நடிப்பு அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அவருடைய ஒவ்வொரு அசைவும் ரசிகர்களின் பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது. படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே அவர் அனைத்து மொழிகளிலும் சிறப்பான பிரமோஷன்களில் ஈடுபட்டார்.

சிறப்பான பிரமோஷன்கள்
அனைத்து மொழிகளிலும் அவர் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து படத்தின் பிரமோஷன்களை மேற்கொண்டார். தமிழில் அவர் சரளமாக பேசியது அனைவரையும் கவர்ந்தது. சமீபத்திய பேட்டியில் தமிழ் மொழிகுறித்து அவர் மனம் திறந்து பேசினார்.

தமிழ் பேசும் ரகசியம்
தான் தொடர்ந்து தமிழ் படங்கள் அதிகமாக பார்த்து தமிழ் பேசக் கற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தனை மொழிகளை தன்னால் பேச முடியும் என்பது தனக்கே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு மொழி தெரியவில்லை என்று கூறுவதை காட்டிலும் அதை தன்னால் மேனேஜ் செய்ய முடியும் என்பதை கூறவே தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நண்பர்கள் உதவி
தனக்கு தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நண்பர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் தொடர்ந்து ஒரு மாதம் பேசி தான் தமிழ் கற்றுக் கொண்டதாகவும் யஷ் தெரிவித்துள்ளார். அவர்கள் தன்னுடன் பேசி தன்னுடைய தமிழ் மொழியை சரி செய்து தான் சிறப்பாக தமிழ் பேச உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











