நியூ இயர் வருது... சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க... ரசிகர்களுக்கு கே.ஜி.எப் ஹீரோ அட்வைஸ்
பெங்களூரு: புத்தாண்டை ஒட்டி, யாரும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கே.ஜி.எப் ஹீரோ யஷ் அறிவுரை கூறியுள்ளார்.
மொக்கின மனசு என்ற கன்னடபடம் மூலம் நடிகராக அறிமுகமானவர், யஷ். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், ரூபா ஐயர் இயக்கிய சந்திரா படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
இவர் நடித்த கே.ஜி.எஃப் படம் கன்னடம் தவிர, தமிழ் உட்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் ஹிட்டானதால், இந்தியா முழுவதும் அறியப்பட்டார். இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இப்போது நடித்துவருகிறார்.

சஞ்சய் தத்
பிரசாந்த் நீல் இயக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். ரவீனா டாண்டன், ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். அடுத்த வருடம் ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆகிறது.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் யஷ். புத்தாண்டு வரும் புதன்கிழமை பிறக்கிறது. ஒவ்வொருவரும் புத்தாண்டை வித்தியாசமாக கொண்டாடுவது வழக்கம்.

மதுகுடித்துவிட்டு
இந்நிலையில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் அவர். கர்நாடக டிராபிக் போலீஸுடன் சேர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒவ்வொரு வருடமும் புதிய நம்பிக்கைகளுடனும் கனவுகளுடனும் குறிக்கோளுடனும் புத்தாண்டு பிறக்கிறது.

அதிக இழப்பு
ஆனால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் நாம் மகிழ்ச்சியை விட அதிக இழப்பைத்தான் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு நிமிட இன்பம், தேவையற்ற துயரங்களுக்கு வழி வகுத்துவிடும். அதனால் அதை தவிர்க்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு விருப்பமானவர்கள், உங்களை எதிர்பார்த்து வீட்டில் காத்திருப்பார்கள்.

பேருந்தில்...
அதனால் பார்ட்டிக்கு சென்றால், தானே வாகனம் ஓட்டாமல், பேருந்திலோ, வாடகை காரிலோ குடிக்காத நண்பர்களின் வாகனங்களிலோ செல்லலாம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கவனமாக இருங்கள்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











