'இந்தாங்க, நீங்க சாப்பிடுங்க...' ராக்கி பாய்க்கு சாப்பாடு ஊட்டும் பாசக்கார மகள்.. வைரலாகும் வீடியோ!

By

பெங்களூரு: கேஜிஎப் ஹீரோ யஷ்சுக்கு மகள் சாப்பாடு ஊட்டிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Celebrities Self Quarantine | Bharath | Yash | Arun Vijay

மொக்கின மனசு என்ற கன்னடபடம் மூலம் நடிகராக அறிமுகமானவர், யஷ். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், ரூபா ஐயர் இயக்கிய, சந்திரா படம் மூலம் தமிழிலும் அறிமுக மானார்.

இவர் நடித்த 'கே.ஜி.எஃப்' என்ற படம் கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானதால் இந்தியா முழுவதும் அறியப்பட்டார், யஷ். இந்தப் படத்தை நடிகர் விஷால், தமிழில் வெளியிட்டார். இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இதையும் இயக்குகிறார். இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயினாக நடிக்கிறார். ரவீனா டாண்டன், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இதையும் வெளியிடுகிறார். இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் அக்டோபர் 23-ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதிகா பாண்டிட்

ராதிகா பாண்டிட்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் யஷ்சும், நடிகை ராதிகா பாண்டிட்டும், மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி என்ற படத்தில் நடித்த போது காதலில் விழுந்தனர். சில வருடங்களாக காதலித்த அவர்கள், கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அயிரா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

வீடியோ

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்தபடி, ஒர்க் அவுட் வீடியோ உட்பட, தாங்கள் என்ன செய்கிறோம் என்கிற வீடியோவை வெளியிட்டபடி இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் யஷ்சும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாப்பாடு ஊட்டும் மகள்

சாப்பாடு ஊட்டும் மகள்

அதில் அவர் மகள் அயிரா, யஷுக்கு சாப்பாடு ஊட்டிவிடுகிறார். யஷ், நீங்க சாப்பிடுங்க என்று அயிராவுக்கு ஊட்டி விட முயல, மறுக்கும் அவள், அப்பாவுக்கு ஊட்டிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள், உங்களை போலவே உங்கள் மகளும் அழகாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். நல்ல அப்பா, நல்ல மகள் என்று பலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X