Yash19: கேஜிஎஃப் ஹீரோ யஷ் படத்துக்கு இப்படியொரு டைட்டிலா?.. மொரட்டு லுக்கில் சும்மா மிரட்டுராறே!

By Staff

பெங்களூர்: Yash 19 titled Toxic - கேஜிஎஃப் படங்கள் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் யஷ்ஷின் 19வது படம் குறித்த அதிரடியான அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கன்னட திரையுலகை இந்திய திரையுலகமே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் யஷ். கடந்த 2007ல் வெளியான ஜம்படா ஹுடுகி எனும் கன்னட படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

KGF Star Yash 19th movie titled Toxic motion poster and release date announced

ஆரம்பத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வந்த யஷ் கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் தனது மொரட்டுத்தனமான பேடாஸ் நடிப்பை காட்டி இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் சிஇஓவாக மாறியுள்ளார்.

ஒன்லி பீஸ்: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என ஏகப்பட்ட பிரபலங்கள் தமிழ் சினிமாவில் இருந்தும் இன்னமும் 1000 கோடி வசூலை ஈட்ட முடியவில்லை. ஆனால், அதை கன்னட திரையுலகில் இருந்துக் கொண்டு அசால்ட்டாக பிரசாந்த் நீல் உதவியுடன் சாதித்து முடித்துள்ளார் யஷ். அடுத்து கேஜிஎஃப் 3 வருமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் ட்ரீட்டை கொடுக்க காத்திருக்கிறார்.

19வது படம் ரெடி: கேஜிஎஃப் முதல் பாகம் 250 கோடி வசூலுக்கும் மேல் ஈட்டிய நிலையில், பாலிவுட் ரசிகர்களுக்கு புஷ்பா படம் போல அந்த படமும் பிடித்துப் போய் விட்டது. கேஜிஎஃப் 2 திரைப்படம் 1100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில், தனது 19வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் யஷ்.

டாக்ஸிக்: சோஷியல் மீடியா மட்டுமின்றி இந்த கால சூழ்நிலையில் உலகம் முழுவதும் டாக்ஸிக் (Toxic) எனப்படும் நச்சு எல்லோர் மனங்களில் நிறைந்துள்ள நிலையில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்க உள்ள 19வது படத்திற்கு டைட்டிலையே டாக்ஸிக் என வைத்துள்ளனர். அதன் மோஷன் போஸ்டர் வீடியோவில் ஜோக்கர்களும், துப்பாக்கி ஏந்திய யஷ்ஷும் இடம்பெற்றுள்ளார்.

எப்போ ரிலீஸ்: சொல்லி அடிக்கும் கில்லி போல டாக்ஸிக் திரைப்படம் வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஒரு வருடம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது என்றும் கூறுகின்றனர். இந்த படத்தை முடித்து விட்டு கேஜிஎஃப் 3 பக்கம் யஷ் வருவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X